The Indian Times

குக் வித் கோமாளி ஷூட்டிங் இவ்வளவு ஜாலியா இருக்குமா? வீடியோ வெளியிட்ட குரேஷி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு உண்டு.இரண்டு சீசன்களை கடந்து மூன்றாவது சீசனில் அடியெடுத்து உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கடந்த இரண்டு சீசன்கள் நிகழ்ச்சியை போலவே மக்கள் இந்த நிகழ்ச்சிக்கும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.இந்த குக் வித் கோமாளி சீசனில் புதியதாக அதிர்ச்சி அருண் மற்றும் பரத் ஆகிய இரண்டு பேர் கோமாளிகளாக இணைந்துள்ளனர்.வாரம் தோறும் வித்தியாசமான கெட்டப்பில் வந்து கோமாளிகள் அசத்துவது காண்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக களம் இறங்கி இருப்பவர் தான் குரேஷி.கலக்கப்போவது யாரு சீசன் 5ல் போட்டியாளராக அறிமுகமாகியவர் குரேஷி.தனது கடின உழைப்பினால் அந்த சீசனில் கடுமையாக போட்டியிட்டு டைட்டிலை தட்டி சென்றார்.கலக்கப்போவது யார் என்ற டைட்டிலை இவருக்கு வழங்கியதே சினிமாவில் கலக்கி வரும் சிவகார்த்திகேயன் தான்,இவரும் தனது வாழ்க்கையை இந்த டைட்டிலை வென்று தான் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற பிறகு குரேஷியின் திறமைக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை.இந்த நிகழ்ச்சி மூலம் தற்போது இவர் மிக பிரபலம் ஆகி உள்ளார்.

இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் சிரிப்பாக இருக்கும் என்றால் கிடையாது அந்த படப்பிடிப்பு நடக்கும் இடம் முழுவதும் சிரிப்பலை தான்,படப்பிடிப்புக்கு பின்புறம் நடக்கும் நிகழ்ச்சிகளையும் காமெடிகளை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார் குரேஷி.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.வீடியோவை பார்த்த ரசிகர்கள் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் சிரிப்பாக இருக்கிறது என்று பார்த்தால் பின்னாலும் இவ்வளவு சிரிப்பா சூப்பர் என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Embed video credits : KURAISHI VIBES

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in