The Indian Times

“அவங்க கஷ்டத்த எல்லார்க்கும் சொல்லி காட்டக்கூடாது!” BIGGBOSS 5 Promo

விஜய் டிவி ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்த பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கி விட்டது. இந்த முறை இசைவாணி, ராஜு, மதுமிதா , அபிஷேக் ராஜா , நமீதா மாரிமுத்து , பிரியங்கா , அபிநய் , பவானி ரெட்டி, சின்ன பொண்ணு , நடியா சங் , வருண் , இம்மான் அண்ணாச்சி , ஸ்ருதி , அக்ஷரா ரெட்டி , ஜக்கி பெர்ரி, தாமரை செல்வி, சிபி சந்திரன் , நிரூப் ஆகியோர் கலந்துகொண்டனர். நேற்று இந்த நிகழ்சியின் முதல் எபிசோட் ஒளிபரப்பானது. இதழ் முதல் நாளே பேர் பாடலை போட்டு 10.30 மணிக்கு போட்டியாளர்களை எழுப்பினார் பிக்பாஸ். ஆனால் அதற்கு முன்பே சில போட்டியாளர்கள் கண்முழித்து விட்டனர். இதன் பிறகு போட்டியாளர்கள் 4 அணிகளாக பிரிந்துள்ளனர். அதில் ராஜு பாத்ரூம் சுத்தம் செய்யும் தலைவராகவும் ,

Advertisement

நமீதா பாத்திரங்களை சுத்தம் செய்யும் தலைவராகவும் , சின்ன பொண்ணு சமையல் தலைவராகவும் , பவனி ரெட்டி வீட்டை சுத்தம் செய்யும் தலைவராகவும் மற்ற போட்டியாளர்கள் இவர்களுக்கு கீழ் வேலை செய்ய நான்கு அணிகளாக பிரிந்துள்ளனர். பிக்பாஸ் வீட்டின் முதல் நாள் என்பதால் போட்டியாளர்கள் யாருக்கும் பெரியளவில் டாஸ்குகள் ஏதும் கொடுக்கப்படவில்லை. அன்றாடம் பயன்படுத்துவதற்கான பொருட்கள் அனைத்தும் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டது. அதோடு தாமரை செல்வி மிகவும் வெகுளியாக இருக்கிறார். அவரை முதல் நாளே சில போட்டியாளர்கள் பேய் கதை கூறி பயமுறுத்தினார். இதுவரை போட்டியாளர்கள் இடையே எந்த ஒரு பிரச்னையும் இல்லை. அடுத்து நடக்க போவதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in