The Indian Times

16 லட்சத்துடன் BIGG BOSS-ல் இருந்து வந்த பூர்ணிமாவுக்கு பிரம்மாண்ட வரவேற்பு

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் ஆகியவர் தான் பூர்ணிமா ரவி,முன்னதாக யூடியூபில் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்திருந்த இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது

இதனை சரியாக பயன்படுத்தி போட்டியில் கலந்துகொண்டார், இந்த போட்டியில் இவருக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் தான் அதிகம் வந்துள்ளது.இதற்கு பிறகு இவருக்கு சினிமா வாய்ப்புகள் வருமா என்பது சந்தேகம் தான்

Advertisement

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் முன்பே பூர்ணிமா நயன்தராவின் அன்னபூரணி படத்தில் நடித்து உள்ளார்.

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் மாயா உடன் சேர்ந்து இவர் அடித்த லூட்டிக்கு அளவே இல்லை

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து 16 லட்சம் பணப்பெட்டியுடன் விளையாட்டில் இருந்து பாதியில் வெளியேறி இருக்கிறார்

இருந்தால் ஜெயிக்க மாட்டோம் என்பதை தெரிந்துகொண்ட பூர்ணிமா புத்திசாலி தனமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக பிக் பாஸ் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய இவருக்கு வீட்டில் உள்ளவர்கள் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்துள்ளனர்.

Advertisement

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in