The Indian Times

அர்ஜுன் தாஸ் மிரட்டும் ரசவாதி படத்தின் டீசர் வெளியாகியது

நடிகர் அர்ஜுன் தாஸை தெரியாதவர்கள் தமிழ் சினிமாவில் இருக்க முடியாது,அந்தளவிற்கு தனது குரலால் பிரபலமாகி இருக்கிறார் இவர்.2019 ஆம் ஆண்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகிய கைதி படத்தில் முக்கிய வில்லன் வேடத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார் அர்ஜுன் தாஸ்.இவரின் குரலுக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இப்படத்தில் இவரின் குரலின் மூலம் ரசிகர்கள் அனைவரையும் அதிகம் கவர்ந்தார் அர்ஜுன் தாஸ். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் கதாநாயகனாக சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டார்,அதன்படி இவர் கதாநாயகனாக நடித்த முதல் படம் அந்தகாரம்,இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுக்காவிட்டாலும் இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.இப்படத்திற்கு பின்னர் விஜயின் மாஸ்டர் படத்தில் நடித்து நல்ல வரவேற்பினை பெற்று தனது நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தார்.

Advertisement

தற்போது இயக்குனர் சாந்தகுமார் இயக்கத்தில் ரசவாதி படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக தான்யா நடித்துள்ளார்.தமன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Embed Video Credits : DIVO MUSIC

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in