The Indian Times

BIGG BOSS I LOVE YOU… பிக் பாஸ் கண்ணை கையில் TATTOO போட்டுக்கொண்ட தனலட்சுமி

பிக் பாஸ் 6வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலமாகியவர் தனலட்சுமி. சாதாரணமாக செல்போன்களில் ரீல்ஸ் மற்றும் டிக் டாக் வீடியோ செய்து வைரலாகி இன்று உலக மக்களின் பார்வைக்கு தனது கடின உழைப்பினால் மேலே முன்னேறி வந்துள்ளார்.இந்த நிகழ்ச்சியில் தனலக்ஷ்மிக்கு ரசிகர்களிடம் இருந்து நல்ல ஆதரவே கிடைத்து வந்தது.இந்த சீசனில் முதல் முதலாக குறும்படம் தனலக்ஷ்மிக்கு ஆதரவாகா தான் போடப்பட்டது.அந்தளவிற்கு நல்ல போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் வலம் வருபவர் தனலட்சுமி . வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

ஆரம்பத்தில் டிக் டாக் வீடியோ செய்து வந்த தனலட்சுமி பின்னர் நடிக்கவும் தொடங்கினார்.இருப்பினும் இவருக்கு ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வாய்ப்பு தனலட்சுமியை சென்றடைந்தது. இதன் மூலம் அதிக பிரபலம் ஆகிவிடலாம் என வாய்ப்பினை ஒத்துக்கொண்டு பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக கலந்துகொண்டு தனது முழு திறமையையும் காண்பித்து விளையாடி வந்தார்.ஆனால் எதிர்பாராத விதமாக குறைந்த வாக்குகளை பெற்று வெளியே சென்றார்..இவருக்கு தற்போது ரசிகர்கள் கூட்டம் முன்பை விட அதிகமாகி உள்ளது என்றே கூறலாம்.

Advertisement

தற்போது இவர் பிக் பாஸ் கண்ணை தனது கைகளில் பச்சை குத்தியுள்ளார். பிக் பாஸ் சீசன் 2ல் ரித்திகா நிகழ்ச்சியில் இருக்கும் பொழுதே கைகளில் டாட்டூ போட்டுகொண்டு மிக பிரபலம் ஆகி அந்த சீசன் டைட்டிலயும் வெற்றிபெற்றார்.அதன்படி தற்போது இவர் பச்சை குத்திய வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் தனலட்சுமியை பெருமளவு பாராட்டி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in