பேயோடு போராடும் தாயாக நயன்தாரா – “கனெக்ட்” திரை விமர்சனம் (?/5)

நடிகை நயன்தாரா இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில் நடித்துள்ள படம் கனெக்ட்.இப்படத்தில் இவருடன் அனுபம் கேர்,சத்யராஜ் மற்றும் வினய் ஆகியோர் நடித்துள்ளனர்.நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர் நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது.இப்படம் முழுக்க முழுக்க திகிலூட்டும் பேய் படமாக உருவாகியுள்ளது.90 நிமிடங்கள் மட்டுமே இப்படம் ஓடும் என்பதால் பல திரையரங்குகள் இடைவேளை இல்லாமல் படத்தினை ஓட்டி வருகின்றனர்.இப்படம் ரசிகர்களை பயமுறுத்தியதா என்பதை கீழே விமர்சனத்தில் காண்போம்.

பேயோடு போராடும் தாயாக நயன்தாரா - "கனெக்ட்" திரை விமர்சனம் (?/5) 3

படத்தின் கதை:

கிறிஸ்தவ குடும்பமாக இருக்கிறது நயன்தாராவின் அழகிய குடும்பம்.கணவர் வினய் இவர் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.நயன்தாராவின் தந்தையாக சத்யராஜ் நடித்துள்ளார்.இப்படி குடும்பம் அழகான வாழ்க்கையை நோக்கி சென்று கொண்டு இருக்கே,கொரோனா பரவலால் லாக் டவுன் போடப்படுகிறது.மருத்துவர் வினய் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.மேலும் இந்த நோயால் வினய்,நயன் மற்றும் அவரது மகள் ஆகியோர் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுகின்றனர்.வினய் கொரோனா பரவலால் உயிரிழந்து விடுகிறார்.இதனால் இந்த அழகிய குடும்பமே சுக்குநூறாகிறது.நயன்தாரா மகள் அப்பா வினய் இடம் பேச மந்திரவாதியை பார்க்க செல்கிறார்,அங்கு நடந்த தவறுகளால் ஒரு ஆபத்தான பேய் அவர் உடம்பில் ஏறிவிடுகிறது.இது நயன்தாரா மற்றும் சத்யராஜ்கு தெரிய வரவே,பேயினை எப்படி சமாளித்தார்கள்,பேயிடம் இருந்து மகளை காப்பாற்றினாரா என்பதே படத்தின் கதை

கட்டாயம் படிக்கவும்  சமந்தா போல் வசனம் பேசி அப்படியே நடித்து அசத்திய VIJAYTV கேபி

பேயோடு போராடும் தாயாக நயன்தாரா - "கனெக்ட்" திரை விமர்சனம் (?/5) 4

படத்தின் விமர்சனம்:

90 நிமிடங்கள் ஓடும் படத்தில் முதல் 15 நிமிடங்களிலேயே படம் சூடு பிடிக்க தொடங்கிவிடுகிறது.பின்னர் எங்கும் தொய்வில்லாமல் ஓடுகிறது.அம்மாவாக வரும் நயன்தாரா சிறப்பாக நடித்து ஒரு அம்மாவாகவே மாறியுள்ளார்.நயன்தாராவின் மகள் பேய் பிடிக்கும் காட்சிகளில் எல்லாம் நடிப்பினால் பட்டையை கிளப்பி இருக்கிறார்.சத்யராஜ் வழக்கம் போல தனது சிறப்பான நடிப்பினை காண்பித்துள்ளார் மேலும் மகளின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என நினைத்து வேதனை படும் காட்சிகளில் மிரட்டியுள்ளார்.பயங்கர திகில் உடன் பரபரப்பாக கதையினை கொண்டு சென்றுள்ளார் இயக்குனர் அஸ்வின்.கிறிஸ்தவ குடும்பம் பேய் விரட்டுவதை சற்று வித்தியாசமாக காண்பித்துள்ளார்கள்.படத்திற்கு பின்னணி இசை கொடுத்த ப்ரித்வி சந்திரசேகருக்கு பெரும் பாராட்டுக்கள்,இசையின் மூலமே பயத்தினை படத்தில் அதிக இடங்களில் காட்டியுள்ளார்.படத்தில் பாதராக வரும் அனுபம் கேர் தனது சிறப்பான நடிப்பினை காண்பித்து படத்தினை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.பல இடங்களில் மக்களுடன் இப்படம் கனெக்ட் ஆகுவதால் கனெக்ட் என படத்திற்கு பெயர் வைத்திருப்பார்களோ என்ற கேள்வியை இப்படம் பார்க்கும் நமக்குள் எழும்ப வைக்கிறது.மொத்தத்தில் இப்படம் இந்த ஆண்டு வெளியாகிய ஒரு நல்ல பேய் படம் என்றே கூறலாம்

கட்டாயம் படிக்கவும்  வசூலில் சிம்புவின் பத்துதலயை ஓரம்கட்டிய நானி தசரா.... கோடிகளில் குளிக்கும் தசரா

கனெக்ட் படத்திற்கு இந்தியன் டைம்ஸ் வழங்கும் ரேட்டிங் – 3/5

Leave a Comment