The Indian Times

புகழ் கஷ்டப்பட்டு செய்த ICE-ஐ உடைத்த ஸ்ருஷ்டி-சண்டைக்கு சென்ற AUNDY… COOK WITH COMALI

விஜய் தொலைக்காட்சியில் மக்களுக்கு பிடித்தமான நிகழ்ச்சி என்று கூறினால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி மட்டும் தான். இந்த நிகழ்ச்சி மக்களிடம் மிகவும் பெரிய வரவேற்பினை பெற்றுள்ளது. சிறிய விதை போல தொடங்கிய இந்த நிகழ்ச்சி மக்களின் பேராதரவால் தற்போது அசைக்கமுடியாத ஆலமரம் போல மாறியுள்ளது.மூன்று சீசன்களை கடந்து நான்காவது சீசனில் களம் இறங்கியுள்ள இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் காண பெரிய ரசிகர்கள் உள்ளனர்.இந்த நான்காவது சீசனுக்கும் கடந்த இரண்டு சீசன்களை போலவே மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

தற்போது நிகழ்ச்சியில் போட்டியாளராக ஆண்ட்ரியா, காளையன், ராஜ் ஐயப்பா , விசித்ரா,கிஷோர் ராஜ்குமார்,ஷிவாங்கி ,ஸ்ருஷ்டி ,ஷெரின் ,மைம் கோபி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இந்த முறை கோமாளியாக இருந்த ஷிவாங்கியும் குக் ஆக களம் இறங்கி உள்ளார்,அதேபோல் கோமாளியாக புகழ்,சில்மிஷம் சிவா,ஜிபி முத்து,ஓட்டேரி சிவா,குரேஷி,தீபன் ,சுனிதா,மோனிஷா பிளெஸ்ஸி ,ரவீனா தாஹா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இந்நிகழ்ச்சியில் இருந்து முதல் எலிமினேஷனாக கிஷோர் வெளியேறினார்,இரண்டாவது காளையன் ,மூன்றாவது ராஜ் ஐயப்பா வெளியேறியுள்ளனர்.நான்காவதாக விஜே விஷால் வெளியேறியுள்ளார்.

இந்த வாரம் எலிமினேஷன் போட்டி நடைபெற்றுள்ளது.இந்நிகழ்ச்சியில் புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது.ப்ரோமோவில் இந்த முறை புகழ் ஆண்டிக்கு கோமாளியாக சென்றுள்ளார்.ஐஸ் மேக்கிங் சேலஞ்சில் செய்த ஐஸை ஸ்ருஷ்டியிடம் கொண்டு காண்பிக்கவே ஸ்ருஷ்டி அதனை உடைத்துள்ளார்.இதனால் ஆண்டி கடுப்பாகி புகழை திட்டியுள்ளார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.மேலும் புகழ் படும் பாடை கண்டு ரசிகர்கள் இப்படி மாட்டிகிட்டாரே இந்த சீசனில் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Embed video credits : vijay television

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in