The Indian Times

ஷெரினாக மாறிய புகழ்… ஸ்ருஷ்டியாக மாறிய குரேஷி.. தலையில் கைவைத்த COOK-கள்.. COOK WITH COMALI

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடம் மிகவும் பலத்த வரவேற்பினை பெற்றுள்ளது.சிறிய செடி போல ஆரம்பித்த இந்த நிகழ்ச்சில் மக்களின் பேராதரவால் தற்போது அசைக்கமுடியாத ஆலமரம் ஆக உருவெடுத்துள்ளது.மூன்று சீசன்களை கடந்து நான்காவது சீசனில் களம் இறங்கியுள்ள இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் காண பெரிய ரசிகர்கள் உள்ளனர்.இந்த மூன்றாவது சீசனுக்கு கடந்த இரண்டு சீசன்களை போலவே மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

தற்போது நிகழ்ச்சியில் போட்டியாளராக ஆண்ட்ரியா, காளையன், ராஜ் ஐயப்பா , விசித்ரா,கிஷோர் ராஜ்குமார்,ஷிவாங்கி ,ஸ்ருஷ்டி ,ஷெரின் ,மைம் கோபி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இந்த முறை கோமாளியாக இருந்த ஷிவாங்கியும் குக் ஆக களம் இறங்கி உள்ளார்,அதேபோல் கோமாளியாக புகழ்,சில்மிஷம் சிவா,ஜிபி முத்து,ஓட்டேரி சிவா,குரேஷி,தீபன் ,சுனிதா,மோனிஷா பிளெஸ்ஸி ,ரவீனா தாஹா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.கடந்த வாரம் முதல் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகி மக்களை கவர்ந்து வருகிறது.கடந்த வாரம் எலிமினேஷன் சுற்றில் கிஷோர் ராஜ்குமார் வெளியேறினார்.இரண்டாவதாக காளையன் மூன்றாவதாக ராஜ் ஐயப்பா வெளியேறியுள்ளார்.

இந்த வார நிகழ்ச்சியின் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி.ப்ரோமோவில் கோமாளிகள் அனைவரும் குக்குகள் போல வேடமணிந்து வந்துள்ளனர்.அதன்படி ஷெரினாக புகழ், ஸ்ருஷ்டியாக குரேஷி வேடமணிந்து வந்து அனைவரையும் அசத்தியுள்ளார்கள்.மேலும் இருவரும் போலவும் பேசி அனைவரையும் சிரிக்க வைத்துள்ளனர்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்று நிகழ்ச்சியின் எதிர்பார்ப்பினை ரசிகர்களிடம் எகிற வைத்துள்ளது என்றே கூறலாம்

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in