The Indian Times

மிஸ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகும் டெவில் படத்தின் ட்ரைலர் இதோ

சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் களம் இறங்கியவர் இயக்குனர் மிஸ்கின்.இப்படம் நல்ல வரவேற்பை இவருக்கு பெற்றுத்தந்தது.இதனை தொடர்ந்து வெளியாகிய அஞ்சாதே படம் இவரை தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக ஆக்கியது.அதன்பின்னர் சில வெற்றி தோல்வி என படங்களை மாறி மாறி கொடுத்துள்ளார்.தற்போது இவருக்கென ஒரு ரசிகர்கள் கூட்டமே உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் நாகா நடிப்பில் 2014 ஆம் ஆண்டு வெளியாகிய படம் பிசாசு.இப்படத்தில்இவருடன் ராதா ரவி,பிரக்யா,ஹரிஷ் உத்தமன் ஆகியோர் நடித்திருந்தனர்.இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சுமார் வருடங்கள் கழித்து பிசாசு படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது.மேலும் சிவகார்த்திகேயனின் மாவீரன் மற்றும் விஜயின் லியோ படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார் மிஸ்கின்.

Advertisement

இயக்குனர் மற்றும் நடிகர் என்பதை தாண்டி தற்போது இசையமைப்பாளராகவும் அடியெடுத்து வைத்து உள்ளார்.இயக்குனர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகி இருக்கும் டெவில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி இருக்கிறார் மிஸ்கின்,இப்படத்தில் கதாநாயகனாக விதார்த் மற்றும் பூர்ணா ஆகியோர் நடித்துள்ளனர்.

Embed Video Credits : SONY MUSIC SOUTH

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in