The Indian Times

தமிழ் சினிமாவின் முதல் கருப்பு ஹீரோ… ஜிகர்தண்டா 2 ட்ரைலர் வெளியாகியது

நாளைய இயக்குனர் என்ற நிகழ்ச்சியில் குறும்படங்களை எடுத்து போட்டியாளராக தனது வாழ்க்கையை இயக்குனராக தொடங்கியவர் கார்த்திக் சுப்புராஜ்.இவர் முதன் முதலாக இயக்கிய படம் பீசா.இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்திருந்தார்.இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.தனது முதல் படத்திலேயே முன்னணி இயக்குனராக உருவெடுத்தார் கார்த்திக் சுப்புராஜ்.இப்படத்தினை தொடர்ந்து இவர் இயக்கிய படம் ஜிகர்தண்டா .இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

2014 ஆம் ஆண்டு இப்படம் வெளியாகியது.இப்படத்தில் கதாநாயகனாக சித்தார்த் நடித்திருந்தார்,வில்லனாக பாபி சிம்ஹா நடித்திருந்தார்.இப்படம் இன்றுவரை ரசிகர்களிடம் சிறந்த படமாக விளங்குகிறது.இப்படத்திற்கு பிறகு பல வெற்றிப்படங்களை கார்த்திக் சுப்புராஜ் தமிழ் சினிமாவுக்கு கொடுத்துள்ளார்.தற்போது ஜிகர்தண்டா படத்தின் இரண்டாவது பாகத்தினை இயக்க இருப்பதாக அறிவித்திருந்தார்

Advertisement

தற்போது இப்படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்ஜெ சூர்யா நடித்துள்ளனர்.இப்படம் வருகிற 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.இந்த ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.படம் வெற்றிபெற ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Embed Video Credits : SUNTV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in