The Indian Times

41வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் பகத் பாசிலின் யாரும் பார்த்திராத புகைப்படங்கள்

மலையாள சினிமாவின் உச்ச நட்சத்திரம் என்றால் அது பகத் பாசில் தான், அந்தளவுக்கு தனது நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்தவர் இவர்.

2002 ஆம் ஆண்டு சினிமாவில் கையேது தூரம் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து அறிமுகம் ஆகினார், இப்படத்தினை தொடர்ந்து வரிசையாக மலையாளத்தில் படங்கள் நடிக்க தொடங்கினார் பகத்.

Advertisement

பல வெற்றி படங்களை மலையாளம் சினிமாவில் கொடுத்துள்ளார் பகத்.மலையாளத்தில் மட்டுமில்லாமல் தற்போது தமிழ் சினிமாவையும் கலக்கி தனக்கான மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தையே உருவாக்கியுள்ளார்.

இவருக்கு அண்மையில் வெளியான மாமன்னன் படம் மாபெரும் ஹிட் கொடுத்துள்ளது,இதில் இவர் வில்லனாக நடித்திருந்தாலும் ரசிகர்கள் இவரை இப்படத்தில் ஹீரோவாக பார்த்து மீம்ஸ்கள் வெளியிட்டு பயங்கர ட்ரெண்ட் செய்தனர்.

தற்போது தமிழ் சினிமாவில் பகத் பாசிலின் ட்ரெண்ட்டே வேறே மாறி ஆகியுள்ளது.

இந்நிலையில் இவருக்கு அடுத்ததாக புஷ்பா 2 படம் பெரும் எதிர்பார்ப்பில் வெளியாக உள்ளது.

இவர் இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்,ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வரும் நிலையில்,அவரின் பழைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in