The Indian Times

11 ஏழை பெண்களுக்கு சொந்த செலவில் திருமணம் செய்து வைத்த விஷால்

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் செல்லமே படத்தில் கதாநாயகனாக நடித்து சினிமாவில் அறிமுகம் ஆகியவர் நடிகர் விஷால்.இப்படத்தில் இவருக்கு பெரும் வரவேற்பு தமிழ் சினிமாவில் கிடைத்தது.

முதல் படமே மாபெரும் ஹிட் என்பதால் அடுத்தடுத்து தமிழில் பல படவாய்ப்புகள் விஷாலின் கதவை தட்டியது.இதன்மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தினை அடைந்தார். சண்டக்கோழி,திமிரு என வரிசையாக வெற்றிப்படங்களை இறக்கினர்.அறிமுகம் ஆகி முதல் மூன்று படங்களையும் ஹிட் கொடுத்த ஒரே நடிகர் விஷால்.

Advertisement

இதன் மூலம் இவர் முன்னணி நடிகர் என அந்தஸ்தினை தமிழ் சினிமாவில் பெற்றார்.மேலும் தனக்காக ரசிகர்கள் கூட்டத்தினையும் சேர்த்துக்கொண்டார் விஷால்.தொடர்ந்து தமிழில் படங்கள் நடிக்க தொடங்கினார்.

தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கிலும் படங்கள் நடிக்க தொடங்கி நல்ல வரவேற்பினை பெற்றார் விஷால்.

நடிகர்,தயாரிப்பாளர் தமிழ் சினிமாவை கலக்குபவர் விஷால் மேலும் இயக்குனராகவும் அவதாரம் எடுத்து துப்பறிவாளன் 2ஆம் பாகத்தினை இயக்கியுள்ளார்.இப்படம் விரைவில் வெளிவர உள்ளது.இதனை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஷால் சென்னையில் 11 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைத்துள்ளார் மற்றும் ஒவ்வொரு ஜோடிகளுக்கு சீர் வரிசையும் வழங்கியுள்ளார்.தனது கையால் தாலியை எடுத்துக்கொடுத்து மணமக்களை ஆசிர்வாதம் செய்துள்ளார்

இது பழைய புகைப்படங்களாக இருப்பினும் தற்போதும் விஷால் ரசிகர்கள் இதனை வைரல் செய்து வருகின்றனர்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in