The Indian Times

உடல்நல குறைவால் மறைந்தார் இளையராஜா மகள் பவதாரணி

இசைக்கே சொந்தக்காரர் இளையராஜா என்றே சொல்லலாம்,இன்று வரை அவரது பாடல்கள் ஒலிக்காத இடமில்லை,தனது பாடல்களால் மக்களை கட்டிபோட்டுள்ளவர் இளையராஜா.இவரின் இசைக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.

ஆறிலிருந்து அறுபது வரை இவரது இசையை ரசித்து கேட்காதவர்கள் எவரும் இல்லை.அன்னக்கிளி என்ற திரைப்படத்திற்கு இசையமைத்து 1976 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் இளையராஜா.

Advertisement

இவர் தமிழ் திரைப்படங்களுக்கு மட்டுமில்லாமல் தெலுங்கு,மலையாளம்,கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் படங்களுக்கு இசையமைக்க உள்ளார்.இவருக்கு 2010 ஆம் ஆண்டு உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது.

மேலும் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதினை நான்கு முறை பெற்றுள்ளார்.

இவரது மகன் யுவன் சங்கர் ராஜா,கார்த்திக் மற்றும் மகள் பவதாரிணி மற்றும் தம்பி கங்கை அமரன் ,அவரது மகன்கள் எல்லோரும் சினிமாவில் பிரபலங்களாக வலம் வருகின்றனர்.

இவரது மகன் யுவன் ஷங்கர் ராஜாவும் தந்தையை போல பெரிய இசையமைப்பாளராக தமிழ் சினிமாவை வலம் வருகிறார்,

தற்போது இவர் மகள் பவதாரணி உடல்நல குறைவால் காலமாகி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in