The Indian Times

நரிக்குறவர் காலனி பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு இரவு பாடசாலை மற்றும் சேதமடைந்த வீடுகளை சரி செய்து கொடுத்த இமான்

இமான் இசைக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது காதலாக இருந்தாலும் சரி,ஆக்ஷனாக இருந்தாலும் சரி இவரது இசை அந்த இடத்தில் நின்று பேசும்.இவர் இசையில் வெளியாகிய பல பாடல்கள் மாபெரும் ஹிட் அடித்துள்ளது.சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி இருந்த வருத்தப்படாதா வாலிபர் சங்கம் படத்தில் இடம்பெற்றுள்ள ஊதாக்கலரு ரிப்பன் என்ற பாடல் உச்ச வரவேற்பை மக்களிடம் பெற்றது.இதுபோன்ற பல புகழ்பெற்ற பாடல்களை மக்களுக்கு கொடுத்துள்ளவர் தான் இமான். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

தமிழன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியவர் இமான்.இப்படத்தில் நல்ல வரவேற்பு இமானுக்கு கிடைத்தது.அதை தொடர்ந்து இவரது இசையில் வெளியாகிய விசில் படத்தில் இடம்பெற்ற அழகிய அசுரா பாடல் மூலம் தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க செய்தார்.அன்று தொடர்ந்து இன்று வரை பல முன்னணி பிரபலங்கள் படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார்.

Advertisement

2008 ஆம் ஆண்டு இவர் மோனிகா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.இவர்கள் இருவருக்கும் இரண்டு பெண்குழந்தைகள் உள்ளது.இந்நிலையில் கடந்த ஆண்டு இருவரும் தங்களது விவகாரத்தினை அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.இது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.இந்நிலையில் தனது முதல் மனைவியை பிரிந்த உடன் தற்போது இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.தற்போது இவர் விருத்தாச்சலம் பகுதியில் உள்ள நரிக்குறவர் காலனி பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு இரவு பாடசாலை மற்றும் சேதமடைந்த வீடுகளை சரி செய்து கொடுத்துள்ளார்.இவரின் சேவையை மக்கள் பாராட்டி வருகின்றனர்.

Embed Video Credits : POLIMER NEWS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in