The Indian Times

முத்த மழை பொழிந்த ப்ரியங்கா மற்றும் ஐக்கி.. பிக் பாஸ் கொண்டாட்டம் ஆரம்பம்..!!

பிக்பாஸ் 5 வெற்றிகரமாக நடந்து முடிந்து இருக்கு. கடந்த ஐந்து ஆண்டுகளில், பிக் பாஸ் ஐந்து சீசன்களை நடத்தி முடித்து உள்ளது. இந்த ஐந்து சீசன்களுக்கும்  கமல்ஹாசனே தொகுப்பாளராகத் தொடர்ந்தார். முதல் சீசன் 25 ஜூன் 2017 அன்று தொடங்கியது, சமீபத்தில் முடிவடைந்த ஐந்தாவது சீசன் 3 அக்டோபர் 2021 அன்று தொடங்கி ஜனவரி 16, 2022 நிறைவடைந்தது. அடுத்தபடியாக பிக்பாஸ் அல்டிமேட் என 24 மணிநேரமும் ஒளிபரப்பாக கூடிய வகையில் தொடர் தொடங்க உள்ளது. இதில் பிக் பாஸ் தமிழ் தொடரின் முந்தைய சீசன்களில் போட்டியிட்டவர்கள், பிக் பாஸ் அல்டிமேட் டிஜிட்டல் பதிப்பின் முதல் சீசனில் மீண்டும் போட்டியாளர்களாக பங்கேற்பார்கள். 1 முதல் 5வது சீசன் வரையிலான போட்டியாளர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள், வெற்றி பெற்றவர்கள் இந்தப் பதிப்பில் பங்கேற்க முடியாது.

Advertisement

 

எப்போதும் ஒரு சீசன் முடிந்த பிறகு பிக்பாஸ் கொண்டாட்டம் என்ற பெயரில் ஆட்டம் பாட்டம் என முழு பொழுதுபோக்கு நிறைந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும். அதில் அந்த சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவார்கள். நடனக் கலைஞர் சாண்டி மாஸ்டர் குழு நடனம் வாயிலாகவே ஹவுஸ்மேட்ஸ் போன்று நடித்துக் காட்டுவார். இந்த நிகழ்ச்சிக்காக எல்லா போட்டியாளர்களும் தீவிரமாக தயாரித்து வருகின்றனர். இது மட்டுமில்லாமல் அபிஷேக் இன்னறைக்கு இரண்டு போட்டோக்களை பதிவிட்டுள்ளார் அதில் பாவ்னியுடன் சேர்ந்தும் இசை வாணியுடனும் சேர்ந்து ஷூட்டிங்க்கு கிளம்பியதாக பதிவிட்டுள்ளார். இதை பார்க்கும் போது நாம் எதிர்பார்க்கும் பிக்பாஸ் கொண்டாட்டம் ஷூட்டிங் இன்று நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Youtube Video Embed Code Credits: Galatta Tamil

Advertisement

தற்போது ஐக்கியும் ப்ரியங்காவும் மாறி மாறி முத்தம் கொடுத்து கொள்வது போன்ற வீடியோக்கள் வெளியாகியுள்ளன. பிக்பாஸ் கொண்டாட்டத்தில் இவர்கள் இருவரும் பங்கேற்று உள்ளது போல தெரிகிறது. இன்று பிக் பாஸ் கொண்டாட்டம் ஷூட்டிங் நடப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த வீடியோக்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video….

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in