The Indian Times

நிறைமாத மனைவியுடன் PHOTOSHOOT எடுத்த சார்பட்டா பரம்பரை வேம்புலி

சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்து வேம்புலி காதாபாத்திரமாக மனதில் பதித்தவர் தான் ஜான் கொக்கன்,இப்படத்தில் தனது அபரீத நடிப்பினால் அனைவரையும் அசத்தியிருப்பார்.தனது முழு நடிப்பினையும் காண்பித்து தனக்கான இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்தார் வேம்புலி ஜான் கொக்கன்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமாவில் சிறந்த வில்லன் உருவெடுத்துள்ளதாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.அந்தளவிற்கு தனது நடிப்பினால் தாக்கத்தை ஏற்படுத்தினார்,

Advertisement

படத்தில் எந்தளவுக்கு ஆர்யாவை கண்டு ரசித்தமோ அதே அளவுக்கு வேம்புலியையும் ரசிக வைத்தார் இயக்குனர் பா ரஞ்சித்.இப்படம் இவரது சினிமா வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்தியது.

ஆரம்பத்தில் இவர் விளம்பர படங்களிலும் மேலும் படங்களில் குட்டி குட்டி வில்லன் வேடங்களிலும் நடித்து வந்தார்.இவர் வீரம் படத்தில் தலயிடம் சண்டை போடும் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது.இப்படத்தில் அடியாளாக நடித்திருந்த ஜான் தனது கடின உழைப்பினால் மட்டுமே இன்று துணிவு படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடித்து அசத்தியுள்ளார்,

இப்படத்திலும் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.மேலும் ரசிகர்கள் இவரின் அடுத்தடுத்த படங்களுக்கு பெருமளவு எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

இவரது மனைவியும் நடிகை ஆவார்,இவர் பெயர் பூஜா,7ஆம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமாகி கதாநாயகிகளுக்கு தோழி வேடத்தில் நடித்து வருகிறார்.

தற்போது இவர் கர்ப்பமாக உள்ளார்,இவருக்கு கணவர் ஜான் வளைகாப்பு நடத்தியுள்ளார்.இந்த புகைப்படங்களை ஜான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இவர்களுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் நிறைமாதத்தில் இருக்கும் மனைவியுடன் கடற்கரையில் செம்ம ரொமேன்டிக் ஆக புகைப்படம் எடுத்துள்ளார்.இவர் எடுக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்காக பதிவிட்டு வருகிறார்.இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

மேலும் இந்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் நிறைமாதத்தில் கவனமாக இருக்க வேண்டும் என பூஜாவுக்கு அறிவுரை கூறி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in