The Indian Times

பரத் நடிக்கும் காளிதாஸ் 2 படத்தின் பூஜையில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன்

பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தவர் பரத். இப்படம் இவருக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.இப்படத்தினை தொடர்ந்து தமிழ் படங்களில் வரிசையாக நடிக்க தொடங்கினார்.

2004 ஆம் ஆண்டு காதல் படத்தில் கதாநாயகனாக நடித்து வெள்ளித்திரையில் நுழைந்தார்.

Advertisement

இப்படம் மாபெரும் ஹிட் அடித்துள்ளது.இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் மலையாளம் படத்திலும் நடித்துள்ளார்.

அண்மையில் இவர் நடிப்பில் இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் மிரள் படம் வெளியாகி இருந்தது.இப்படத்தில் கதாநாயகியாக வாணிபோஜன் நடித்திருந்தார்.

இப்படம் அண்மையில் வெளியாகி பரத்துக்கு நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் கொடுத்தது.

இப்படத்தினை தொடர்ந்து தற்போது வாணிபோஜன் உடன் இணைந்து லவ் படத்தில் நடித்துள்ளார்.

இயக்குனர் பாலா இயக்கி தயாரித்து இருக்கும் படம் லவ்.இசையமைப்பாளர் ரோனி இசையமைத்துள்ளார்.இப்படமும் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.தற்போது இவர் காளிதாஸ் 2 படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்று உள்ளது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in