The Indian Times

கங்குவா படத்தின் FIRST LOOK போஸ்டர் வெளியாகியது

பிரபல பழம்பெரும் நடிகர் சிவகுமார் அவர்களின் மகன் சூர்யா.தமிழ் சினிமாவில் உச்சத்தில் கொடிகட்டி பறக்கும் நடிகர்களில் இவர் ஒருவர். இவர் தனது நடிப்பால் பல ரசிகர்களையும் தனது வசம் இழுத்துள்ளார்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ்,மலையாள சினிமாவில் உள்ளது.தமிழ் சினிமாவில் கிடைக்கும் அதே வரவேற்பு மலையாள சினிமாவில் கிடைக்கும் நடிகர்களில் இவர் ஒருவர் .நேருக்கு நேர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நுழைந்தவர் சூர்யா.இப்படத்தில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை

Advertisement

தொடர்ந்து முயற்சி செய்து வந்த அவர் இயக்குனர் பாலா இயக்கத்தில் நந்தா படத்தில் நடிகர் சூர்யா நடித்து தனக்கான வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றுக்கொண்டார்.தற்போது சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் 42வது படத்தில் நடிக்க இருக்கிறார்.இப்படம் 10 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.மேலும் 3டியில் இப்படம் வெளியாக உள்ளது.தேவி ஸ்ரீபிரசாத் இசையில்,ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இப்படத்தினை தயாரிக்க உள்ளது.சூர்யாவுக்கு கதாநாயகியாக திஷா பட்டாணி இப்படத்தில் நடிக்க உள்ளார்.

Advertisement

இன்று சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு கங்குவா படத்தின் கிளிம்ப்ஸ் காட்சிகளை வெளியிட்டு இருந்தது,இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இந்நிலையில் தற்போது இப்படத்தின் முதல்பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளது ,போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in