The Indian Times

குடும்பத்துடன் நண்பன் வீட்டு திருமணத்திற்கு வந்த KS ரவிக்குமார்

கே எஸ் ரவிக்குமார்,புரியாத புதிர் படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர்.அதன்பின் தொடர்ந்து பல படங்களை இயக்கி அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.

இவர் இயக்கிய நாட்டாமை படத்திற்கு தான் முதன்முதலாக சிறந்த இயக்குநருக்கான தமிழக அரசு திரைப்பட விருது பெற்றார்.உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார் கே எஸ் ரவிக்குமார்.

Advertisement

இயக்குனராக மட்டும் இல்லாமல் நடிகராகவும் தமிழ் சினிமாவை தற்போது கலக்கி வருகிறார்.1986ஆம் ஆண்டு வெளியாகிய ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகினார்.

அதன்படி தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.தமிழ் படங்களை மட்டுமில்லாமல் தெலுங்கு,கன்னட படங்களையும் இயக்கியுள்ளார்.

தற்போது இயக்கத்தை ஓரம் வைத்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து படங்களில் நடித்து வருகிறார்.

பல ஹிட் படங்களை கொடுத்த கே எஸ் ரவிக்குமார் மீண்டும் படங்களை இயக்க வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தும் வருகின்றனர்.

தற்போது இவர் குடும்பத்துடன் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in