The Indian Times

குடும்பத்துடன் முத்து படத்தை திரையரங்குகளில் கண்டுகளித்த கே எஸ் ரவிக்குமார் புகைப்படங்கள்

கே எஸ் ரவிக்குமார்,புரியாத புதிர் படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர்.அதன்பின் தொடர்ந்து பல படங்களை இயக்கி அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.

இவர் இயக்கிய நாட்டாமை படத்திற்கு தான் முதன்முதலாக சிறந்த இயக்குநருக்கான தமிழக அரசு திரைப்பட விருது பெற்றார்.உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார் கே எஸ் ரவிக்குமார்.

Advertisement

இயக்குனராக மட்டும் இல்லாமல் நடிகராகவும் தமிழ் சினிமாவை தற்போது கலக்கி வருகிறார்.1986ஆம் ஆண்டு வெளியாகிய ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகினார்.

அதன்படி தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.தமிழ் படங்களை மட்டுமில்லாமல் தெலுங்கு,கன்னட படங்களையும் இயக்கியுள்ளார்.

தற்போது இயக்கத்தை ஓரம் வைத்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து படங்களில் நடித்து வருகிறார்.

பல ஹிட் படங்களை கொடுத்த கே எஸ் ரவிக்குமார் மீண்டும் படங்களை இயக்க வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தும் வருகின்றனர்.

தற்போது இவர் சூப்பர் ஸ்டாரை வைத்து இயக்கிய முத்து படம் மீண்டும் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது,அதனை குடும்பத்துடன் கண்டு மகிழ்ந்துள்ளார்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in