The Indian Times

LEO முதல் காட்சியை காண வந்த படக்குழுவினர்

தமிழ் சினிமாவில் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.மாநகரம் படத்தின் மூலம் சினிமாவிற்குள் களம் இறங்கி.கைதி மூலம் அனைவரது கவனத்தினையும் ஈர்த்தார்.

அதனை தொடர்ந்து தளபதி விஜய் வைத்து மாஸ்டர் படத்தினை இயக்கி நல்ல வரவேற்பு பெற்றார்.இவர் இயக்கி 3 படங்களும் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.

Advertisement

இந்நிலையில் தற்போது உலகநாயகனை வைத்து படம் எடுக்க முடிவு செய்து அவருக்காக விக்ரம் கதையினை தயார் செய்து,கமல்ஹாசனிடம் கூறவே கதை பிடித்த கமல் இதனை நானே தயாரிக்கிறேன் என விக்ரம் ஆரம்பமாகியது.

விக்ரம் மாபெரும் வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றது.இப்படத்திற்கு பிறகு தளபதி விஜய் படத்தினை இயக்க உள்ளார் லோகேஷ் கனகராஜ்.இப்படத்திற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஜனவரி 3 முதல் படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளதாகவும் படத்திற்கு லியோ என பெயரிட்டுள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க,த்ரிஷா,ப்ரியா ஆனந்த்,அர்ஜுன்,மன்சூர் அலிகான் ஆகியோர் நடிக்க உள்ளனர்.

இப்படம் இன்று திரையரங்கில் வெளியாகி உள்ளது.இப்படத்தினை காண படக்குழு திரையரங்கிற்கு வருகை தந்துள்ளனர்.

Advertisement

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in