நாட்டுப்புற பாடகர்களான செந்தில் ராஜலக்ஷ்மி தம்பதியினர் விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொன்டு மக்கள் மத்தியில் பெரும் பிரபலமாகினர்.தங்களது இசையின் மூலம் பல ரசிகர்களை சேர்த்துள்ளனர் இவர்கள்.மேடையில் பாடிக்கொண்டிருந்த இவர்கள் தற்பொழுது தங்களது கடின உழைப்பால் சினிமாவில் பாடல் பாடி வருகின்றனர்.அதன்படி பல பாடல்களை சினிமாவில் இருவரும் பாடியுள்ளனர் மேலும் பல பாடல்களை பாடியும் வருகின்றனர்.
செந்திலும் தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் பாடி வருகிறார்.அண்மையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகிய புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஏய் சாமி பாடலை பாடி பலரின் மனதினை கொள்ளை கொண்டார்.இந்த பாடலுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து ராஜலட்சுமி சினிமாவில் முன்னணி பாடகியாக உருமாறி பாடல்களை பாடி வருகிறார்.சினிமாவில் மட்டும் இல்லாமல் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு பாடல்களை பாடி வருகின்றனர்
தற்போது சிங்கர் ராஜலட்சுமி கதாநாயகியாக சினிமாவில் நடிக்க உள்ளார்.இயக்குனர் கணபதி பால முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள லைசென்ஸ் படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார்,இப்படத்தில் இவருடன் ராதா ரவியும் இணைந்து நடிக்க உள்ளார்.இன்று முதல் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.தற்போது முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. படம் வெற்றிபெற ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.