அஞ்சான் தோல்விக்கு இதுதான் காரணம்…முதல் முறையாக காரணத்தினை கூறிய லிங்குசாமி

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் லிங்குசாமி.இவர் தனது முதல் படத்திலேயே மூன்று முன்னணி கதாநாயகர்கள் மற்றும் கதாநாயகிகளை வைத்து படம் இயக்கினார்.நடிகர் மம்மூட்டி,முரளி,அப்பாஸ் நடிப்பில் வெளியாகிய ஆனந்தம் படம் தான் இயக்குனர் லிங்குசாமி இயக்கிய முதல் படம் இப்படம் பெரும் வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றது.இப்படத்தினை தொடர்ந்து நடிகர் மாதவனை வைத்து ரன் படத்தினை இயக்கி சினிமாவின் உச்சத்திற்கே சென்றார்.தமிழ் சினிமாவிற்கு தொடர்ந்து நல்ல வெற்றிப்படங்களை கொடுத்து ரசிகர்களை தனது வசம் தக்க வைத்தவர் லிங்குசாமி.சண்டைக்கோழி,பீமா,பையா என பல வெற்றிப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவை கலக்கியுள்ளார்.படம் இயக்குவது மட்டுமில்லாமல் தரமான படங்களை தயாரித்தும் உள்ளார் லிங்கு சாமி.

கட்டாயம் படிக்கவும்  காதலி விமலாராமன் உடன் தேனிலவை வெளிநாட்டில் கொண்டாடிய நடிகர் வினய்

அஞ்சான் தோல்விக்கு இதுதான் காரணம்...முதல் முறையாக காரணத்தினை கூறிய லிங்குசாமி 1

விளம்பரம்

இவர் நடிகர் சூர்யாவை வைத்து இயக்கிய அஞ்சான் படம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை.இந்த படத்தினால் இவர் ரசிகர்களின் கேலி மற்றும் கிண்டலுக்கு அதிகமாக ஆளாகினர்.பல வெற்றிப்படங்களை கொடுத்த லிங்குசாமி ஒரு படத்தின் தோல்வியால் ரசிகர்களின் விமர்சனங்களுக்கு ஆளாகினார்.இதன் மூலம் மிகுந்த வேதனை அடைந்ததாகவும் இவர் முன்னதாக தெரிவித்திருந்தார்.தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு தெலுங்கில் களம் இறங்கியுள்ள லிங்கு சாமி, இவர் நடிகர் ராம் போதினியை வைத்து தி வாரியார் படத்தினை இயக்கியுள்ளார்.இப்படத்தில் கதாநாயகியாக க்ரித்தி ஷெட்டி நடித்துள்ளார்,வில்லனாக ஆதி நடித்துள்ளார்,தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  சாலையோர தள்ளுவண்டி கடையில் மனைவி கன்னிகா உடன் உணவு அருந்தும் கவிஞர் சினேகன்

அஞ்சான் தோல்விக்கு இதுதான் காரணம்...முதல் முறையாக காரணத்தினை கூறிய லிங்குசாமி 2

விளம்பரம்

இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட லிங்குசாமி முதல் முறையாக அஞ்சான் தோல்வி குறித்து பேசியுள்ளார்,அதில் அவர் கூறியதாவது,அஞ்சான் கேரளாவில் பெரும் வெற்றி அடைந்தது அதேபோல் ஹிந்தியிலும் யூடியூபில் அதிகம் பேர் பார்த்த படமாக உள்ளது.இப்படத்தின் தோல்விக்கு நான் கூட காரணமாக இருக்கலாம்,திரைக்கதையும் ஒரு காரணமாக இருக்கலாம்.படத்திற்கு நிறைய கதைகள் மாற்றப்பட்டது எனக்கு படத்தின் கதைகள் நிலையாக நின்றால் தான் பிடிக்கும்,இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்,படம் நன்றாக இருந்தால் மக்கள் தலையில் வைத்து கொண்டாடியிருப்பார்கள் என தெரிவித்துள்ளார்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment