The Indian Times

அதிரடியில் மிரட்டி பட்டையை கிளப்பும் விஜய் சேதுபதி.. மகாராஜா படத்தின் புதிய ட்ரைலர் வெளியாகியது

நடிகர் விஜய் சேதுபதி பல சினிமா ரசிகர்களை கவர்ந்த கலைஞன்.இவரின் நடிப்பு என்ற கலைக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகி இன்று தெற்கு வடக்கு கிழக்கு மேற்கு என நான்கு திசைகளிலும் நடிகனாக அசத்தி வரும் முன்னனி கலைஞன். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

ஆரம்பத்தில் கூட்டத்தில் ஒருவனாய் வந்த விஜய் சேதுபதி இன்று அவரின் படத்தினை பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர்.கதாநாயகனாக இருந்தாலும் சரி வில்லனாக இருந்தாலும் சரி கொடுக்கும் கதாபாத்திரத்தினை உள்வாங்கி வெளுத்துக்கட்ட கூடிய திறமை உள்ளவர் இவர்.இந்த படம் ஓடாது என தெரிந்தும் அதில் நடித்தால் அந்த அறிமுக இயக்குனர் இயக்குனராக மாறிவிடுவார் என்று பல படங்களில் ஒப்புக்கொண்டு பிறரை இயக்குனராகவும் மாற்றியுள்ளார்.

Advertisement

கதாநாயகனாக மட்டும் இல்லாமல் வில்லனாகவும் நடித்து அசத்தி வருகிறார்.ரஜினி,கமல்ஹாசன் மற்றும் விஜய் போன்ற முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்தும் மிரட்டிவிட்டார்.தற்பொழுது மலையாளம்,ஹிந்தி,தெலுங்கு என்ற மொழி படங்களிலும் நடிக்க தொடங்கிவிட்டார் விஜய் சேதுபதி.நீண்ட நாட்களுக்கு பிறகு இவர் கதாநாயகனாக நடித்த மகாராஜா படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி உள்ளது.

Embed Video Credits : JUNGLEE MUSIC TAMIL

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in