The Indian Times

நம்ம மூஞ்சியா இப்படி இருக்கு..தன்னை தானே கலாய்த்துக்கொள்ளும் மணிமேகலை

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிக பிரபலம் ஆகியவர் மணிமேகலை.ஆரம்பத்தில் சேனலில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகியவர் மணிமேகலை.பல திரைபிரபலங்களை பேட்டியும் எடுத்துள்ளார். தொகுப்பாளராக பணியாற்றிய அவர் தனது கலகலப்பான பேச்சால் பல ரசிகர்களை தனது வசம் இழுத்துள்ளார்.பல நிகழ்ச்சிகளையும் இவர் தொகுத்து வழங்கியுள்ளார் .ஹுசைன் என்ற முஸ்லீம் இளைஞரை காதலித்து வந்த நிலையில் இவர்களது கல்யாணத்திற்கு வீட்டில் யாரும் அனுமதிக்க நிலையில் வீட்டை எதிர்த்து காதலித்தவரை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தி வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

சன் மியூசிக்கில் இருந்து வெளியேறிய மணிமேகலை விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக களம் இறங்கி தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக அடித்து துவம்சம் செய்து வருகிறார்.இந்த நிகழ்ச்சி மூலம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளார் மணிமேகலை.இவருக்கென சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.தற்போது இவர் தனது கணவருடன் இணைந்து யூடியூப் சேனல் தொடங்கி அதில் வீடியோ பதிவிட்டு அனைவரையும் மகிழ்வித்து வருகிறார்.இவருக்காகவே இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் நிறைய பேர் உள்ளனர்.

தற்போது மணிமேகலை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.மணிமேகலை குழந்தையாக இருக்கும்பொழுது எடுத்த புகைப்படத்தினை வீடியோவாக தொகுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இந்த வீடியோவை பதிவிட்டு நம்ம மூஞ்சியா இப்படி இருக்கு என மணிமேகலை தன்னை தானே கலாய்த்துள்ளார்.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அக்கா நீங்க உண்மையிலேயே ரொம்ப கியூட் ஆ இருக்கீங்க என கமெண்ட் செய்து வீடியோவை இன்ஸ்டாவில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in