The Indian Times

தமிழுக்காக போராடி செ த் த வன் ஒருத்தன் இருக்கான்… GV பிரகாஷின் REBEL டீசர் வெளியாகியது

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் என தமிழ் சினிமாவை கலக்கி வருபவர் ஜிவி பிரகாஷ்,இவரது இசைக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.2006 ஆம் ஆண்டு வெளியாகிய வெயில் படத்தின் மூலம் சினிமாவுக்கு இசையமைப்பாளராக அறிமுகம் ஆகியவர் ஜிவி பிரகாஷ் குமார்.இப்படத்தின் இசை மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க செய்தார்.இப்படத்தினை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசையமைக்க தொடங்கிவிட்டார் ஜிவி பிரகாஷ் குமார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இசையமைப்பாளராக இருந்தது போதாது என தற்போது கதாநாயகனாகவும் நடித்து அசத்தி வருகிறார்.டார்லிங் படத்தின் மூலம் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகம் ஆகியவர் ஜிவி.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார்.மேலும் தற்போது தொடர்ந்து படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.சூரரைப்போற்று படத்தில் சிறந்த இசையமைத்ததற்கு ஜிவி தேசிய விருதினை பெற்றுள்ளார்.தற்போது அடுத்தடுத்து படங்களில் கதாநாயகனாகவும் நடித்து சினிமாவை வலம் வருகிறார்.

Advertisement

தற்போது இவர் இயக்குனர் நிகேஷ் இயக்கத்தில் ரிபெல் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தினை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படத்தின் டீசர் தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Embed Video Credits : SAREGAMA TAMIL

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in