The Indian Times

மனைவி நயனுடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்த விக்னேஷ் சிவன்

போடா போடி படத்தின் மூலம் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகம் ஆகியவர் விக்னேஷ் சிவன்.இப்படத்தில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.

இருப்பினும் நம்பிக்கையை தளரவிடாமல் தொடர்ந்து முயற்சி செய்து விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவை வைத்து நானும் ரவுடி தான் என்ற படத்தினை இயக்கினார்.

Advertisement

இந்த படம் மாபெரும் வரவேற்பினை பெற்றது.இப்படத்தினை தொடர்ந்து பல படங்களை தமிழில் இயக்கி வருகிறார்.அண்மையில் இவர் இயக்கத்தில் வெளியாகிய காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்று ரூ.66 கோடி ரூபாய் வசூலையும் பெற்றது.

இவர் அடுத்ததாக அஜித் குமார் வைத்து லைக்கா நிறுவனம் தயாரிப்பில் புதிய படத்தினை இயக்க உள்ளார்.

இவர் கூறிய கதையில் அஜித்திற்கு லைக்கா நிறுவனத்திற்கு திருப்தி இல்லை இதனால் இப்படத்தில் இருந்து விக்னேஷ் சிவனை நீக்கி உள்ளது லைக்கா நிறுவனம்.

அஜித்தின் அடுத்த படத்தினை இயக்குனர் மகிழ் திருமேனியிடம் கொடுத்துள்ளது,இருப்பினும் விக்னேஷ் சிவன் மனம் தளராமல் தொடர்ந்து தனது அடுத்தப்படத்திற்காக வேலைகளை செய்து வருகிறார் விக்னேஷ் சிவன்.

இவர் தான் காதலித்து வந்த நடிகை நயன்தாராவை கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.மேலும் வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளையும் தம்பதியினர் பெற்றுக்கொண்டனர்.

Advertisement

தற்போது இவர் மனைவி உடன் வெளிநாடு சென்றுள்ளார். அங்கு எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in