பகைவர்களை பந்தாடிய சோழர்களின் கம்பீரமான பொன்னியின் செல்வன் TEASER

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர் மணிரத்தினம்.இவருக்கென சினிமாவில் தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.காதல் படங்களை இயக்குவதில் இவரை அடித்துக்கொள்ள இன்று வரை எவரும் இல்லை அந்த மாதிரி காதல் படங்களை தயாரித்து மக்களை கவர்ந்தவர்.இவர் இயக்கத்தில் வெளியாகிய தளபதி,ரோஜா ,நாயகன்,பம்பாய் என பல பாடங்கள் மாபெரும் வெற்றி அடைந்தவை.இவர் தமிழில் இயக்கிய முதல் படம் நடிகர் முரளி,ரேவதி ,சத்யராஜ் நடிப்பில் வெளியாகிய பகல் நிலவு.இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அடியெடுத்து வைத்து இன்று வரை வெற்றிகரமான இயக்குனராக வலம் வருகிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  ஹைதராபாத் சென்றுள்ள சிறகடிக்க ஆசை கதாநாயகி மீனாவின் புகைப்படங்கள்

பகைவர்களை பந்தாடிய சோழர்களின் கம்பீரமான பொன்னியின் செல்வன் TEASER 1

விளம்பரம்

தற்போது மணிரத்தினத்தின் கனவு படம் என்று கூறினால் அது பொன்னியின் செல்வன் தான்.தற்போது இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் பொன்னியின் செல்வன் முதல் பாகம் .இப்படத்தில் விக்ரம்,கார்த்தி,ஜெயம் ரவி,த்ரிஷா மற்றும் ஜெயராம் ஆகியோர் நடித்து வருகின்றனர்.படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.இப்படத்திற்கு தமிழ் சினிமாவில் பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது காரணம் தற்போது பெரிய ஹீரோக்களின் படங்கள் சரியாக ஓடாததாலும்,பிற மொழி படங்கள் மாபெரும் வெற்றியை பெற்றுவருவதாலும் தமிழ் ரசிகர்கள் இப்படத்திற்கு ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  கணவர் விக்கி உடன் நயன்தாரா எடுத்த அழகிய புகைப்படங்கள்

பகைவர்களை பந்தாடிய சோழர்களின் கம்பீரமான பொன்னியின் செல்வன் TEASER 2

விளம்பரம்

இப்படத்தின் போஸ்டர்கள் அண்மையில் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.அதன்படி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் டீசர் வெளியாகியுள்ளது.ஒவ்வொரு மொழிகளிலும் மிக பெரிய நட்சத்திரங்கள் டீசரை வெளியிடுகின்றனர்.அதுபோல தமிழில் நடிகர் சூர்யா இந்த டீசரை வெளியிட்டுள்ளார்.டீசரை பார்க்கும் பொழுதே படம் மிக பிரம்மாண்டமாக அமைந்துள்ளதது தெரிகிறது.இப்படம் செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.இந்த டீசர் படத்தின் எதிர்பார்ப்பினை அதிகரித்துள்ளது

கட்டாயம் படிக்கவும்  குலதெய்வம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் சரத்குமார் ராதிகா

விளம்பரம்

Embed video credits : TIPS TAMIL

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment