The Indian Times

இயக்குனர் மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதன் வீட்டு தீபாவளி கொண்டாட்டம்

கோமாளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராகியவர் பிரதீப் ரங்கநாதன். இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றுக்கொடுத்தது.இப்படத்தினை தொடர்ந்து முன்னணி இயக்குனராக தமிழ் சினிமாவில் அவதாரம் எடுத்தார்.இப்படத்தினை தொடர்ந்து இவரே ஹீரோ ஆக முடிவு செய்து லவ் டுடே என்ற படத்தினை இயக்கி தற்போது ஹீரோவாகவும் நடித்து அசத்தியுள்ளார்.

Advertisement

இப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.அண்மையில் இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பினை இவருக்கு பெற்றுக்கொடுத்தது.இதனை தொடர்ந்து கதாநாயகனாகவும் நடிக்க முடிவு செய்துள்ளார் பிரதீப்.இவர் அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.இப்படத்திற்கு ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

Advertisement

இந்நிலையில் இவர் தீபாவளியை தனது குடும்பத்துடன் இணைந்து கொண்டாடியுள்ளார் மேலும் முதல் முறையாக தனது குடும்ப புகைப்படத்தினையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.ரசிகர்களும் அவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in