The Indian Times

ரஜினிக்கு மணல் சிற்பம் செய்து வாழ்த்து தெரிவித்த மணல் சிற்பக் கலைஞர்!

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த தான். உலக சினிமாவையே திருப்பார்க்க செய்தவர் இவர். இவருக்கு தமிழ் நாடு மட்டுமல்லாமல் மலேசியா சிங்கப்பூர் என உலகமெங்கும் பல நாடுகளில் உள்ள தமிழ் ரசிகர்கள் உள்ளனர். இவர் படம் ரிலீஸ் ஆனாலே தியேட்டர் திருவிழா போல் காட்சியளிக்கும். கடைசியாக ரஜினி நடிப்பில் வெளிவந்த படம் தர்பார். இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க நயன்தாரா இவருக்கு ஜோடியாக நடித்திருப்பார்.தற்போது ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Advertisement

இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்க, டி.இம்மாண் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட லுக் வீடியோ வெளியாகி மிக பெரிய அளவில் பேசப்பட்டது.இதை தொடர்ந்து இந்த படத்தில் குஷ்பு , கீர்த்தி சுரேஷ் , நயன்தாரா, மீனா , பிரகாஷ் ராஜ் , சூரி என பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இந்நிலையில் இந்தியத் திரைப்படத் துறையில் வழங்கப்படும் மிகவும் உயரிய விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருதுக்கு ரஜினி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து இவருக்கு அரசியல் பிரமுகர்களிலிருந்து சினிமா பிரபலங்கள் வரை அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

அது மட்டுமில்லாது இவரது ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இந்த செய்தியை வைரலாக்கி வருகின்றனர். இந்நிலையில் பத்ம ஸ்ரீ விருது பெற்ற மணல் சிற்பகலைஞர் சுதர்சன் பட்நாயக், ரஜினிகாந்திற்கு மணலில் சிற்பம் செய்து தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in