The Indian Times

விஷால் 31 படத்தின் motion poster !

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் விஷால். சண்டை கோழி , திமிரு , இரும்பு திரை என பல வெற்றி படங்களை இவர் கொடுத்துள்ளார். நடிகர் என்பதையும் தாண்டி சமூக அக்கறையும் இவருக்கு அதிகம் இருப்பதால் இவரை தன் ரசிகர்கள் புரட்சி தளபதி என்று தான் அழைப்பார்கள். இவர் இறுதியாக நடித்து வெளியான படம் சக்ரா.

Advertisement

இந்த படத்தை எம்.எஸ். அனந்தன் இயக்கி இருந்தார். இவருக்கு ஜோடியாக ஷ்ரதா ஸ்ரீநாத் மட்டும் முதல் முறையாக வில்லியாக ரெஜினா நடித்து இருந்தார். இதற்க்கு அன்பு இவர் நடித்து வெளியான இரும்பு திரை மிக பெரிய வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து இவர் நடித்த சக்ரா படத்திற்கு மிக பெரிய எதிர்பார்ப்புகள் இருந்தது. படத்தின் ஸ்னீக் பீக் உம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Advertisement

ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு படம் வெற்றி பெறவில்லை. கொரோனாவிற்கு பிறகு திரையரங்கு திறந்த பிறகு ரிலீசான படம், இரும்பு திரை அளவிற்கு சக்ரா வெற்றி பெறவில்லை. சமீபத்தில் இரும்புத்திரை படத்தின் ஹிந்தி ரீமேக்கில் விஷால் வில்லனாக நடிக்க போவதாக தகவல் வெளியானது. தற்போது விஷால் நடிக்கும் விஷால் 31 படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்தை து.பா. சரவணன் இயக்குகிறார். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசைமைக்கிறார். இந்த படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது விஷால் 31 மோஷன் போஸ்ட்டரை not a common man என்ற தலைப்பில் விஷால் வெளியிட்டுள்ளார்.

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in