The Indian Times

பாபா பாஸ்கரும் நானும் 8வது வரிக்கும் ஒண்ணா படிச்சோம்! தனுஷ் பேட்டி

ஒல்லியாக இருந்தாலும் கில்லி தான் என்று தன் நடிப்பாற்றலின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளவர் தனுஷ். ஆரம்பகாலத்தில் இவரை பார்த்து விமர்சிக்காத ஆட்களே கிடையாது. காதல் கொண்டேன் படத்தில் நடித்து கொண்டிருந்தபோது ஒரு கூட்டமே இவரை பார்த்து சிரித்தது மறக்க முடியாத நிகழ்வு என்று ஒரு பேட்டியில் இவரே கூறியிருப்பார். ஆனால் தன் விடா முயற்சியினால் தன்னை விமர்சித்தவர்களின் மூக்கை உடைப்பது போல் தன் வெற்றி தடத்தை ஆழமாக பதித்து விட்டார் தனுஷ். இன்று இருக்கும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களையே முந்தி விட்டு ஹாலிவுட்டுக்கு சென்ற பெருமை இவருக்கு நிச்சயம் உண்டு.

டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர் தனுஷின் பல படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றி உள்ளார். இந்நிலையில் விழா ஒன்றில் தனுஷ் பேசிய பொது நடன இயக்குனர் பாபா பாஸ்கரும் நானும் 8வது வரை ஒன்றாக படித்தவர்கள் என்று கூறினார். விஜய் டிவி யின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று குக்கு வித் கோமாளி. வாரந்தோறும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை ரசிக்காத ஆட்களே கிடையாது.

Advertisement

இந்த நிகழ்ச்சியில் அனைவரும் விரும்பும் குக் ஆக இருக்கும் பாபா பாஸ்கர் மாஸ்டர் இந்த நிகழ்ச்சியில் ரகளை செய்து வருகிறார். தனுஷ் எப்பவோ ஒரு மேடையில் பாபா பாஸ்கருடன் இனைந்து படித்த உண்மையை வெளி உலகத்திற்கு கூறியது தற்போது காட்டு தீ போல் பரவி வருகிறது.

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in