The Indian Times

கல்கி படத்தை புகழ்ந்த நடிகர் ரஜினிகாந்த்.. கொண்டாட்டத்தில் படக்குழு

இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்து இருக்கும் படம் கல்கி. இப்படத்தில் அமிதாப்பச்சன், தீபிகா படுகோன் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடித்து உள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையில் பாண் இந்தியா படமாக உருவாகிய இப்படம் கடந்த வியாழக்கிழமை வெளியாகி இருந்தது.

படம் தெலுங்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றாலும், தமிழ் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை. படத்திற்கு கலவையான விமர்சனங்களை மட்டுமே ரசிகர்கள் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் படம் முதல் நாளே உலகளவில் ரூ.275 கோடியை வசூல் செய்து உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்து உள்ளது.

Advertisement

தற்போது இப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் பார்த்து தனது எக்ஸ் பக்கத்தில் பாராட்டி உள்ளார்,அதில் படம் ரொம்ப அருமையாக இருந்ததாகவும், அடுத்தகட்டத்திற்கு படத்தை இயக்குனர் எடுத்து சென்று இருப்பதாகவும் புகழாரம் சூட்டி உள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in