The Indian Times

குறி வச்சா இரை விழணும்.. ரஜினிகாந்த் நடிக்கும் 170வது படத்தின் டீசர் வெளியாகியது

சினிமா உலகின் நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழில் உண்டு.இவர் நடிப்பு ஸ்டைல் என எல்லாவற்றிற்குமே பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை உலகளவு சேர்த்தவர்.வில்லனாகவும்,கதாநாயகனாகவும் தமிழ் சினிமாவை கலக்கியவர் ரஜினிகாந்த். இவரின் படம் வெளியாகும் நாளை இவரது ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுவது வழக்கம்.பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள ஒரே நடிகர் ரஜினிகாந்த்.

Advertisement

இவரின் பெயரை கேட்டால் சிறு குழந்தைக்கு கூட தெரியும்,ஒரு முறை இவரது ரசிகன் ஆகிவிட்டால் இறுதிவரை சூப்பர் ஸ்டாரின் ரசிகன் தான்,அந்தளவுக்கு தனது ஸ்டைல் மற்றும் நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்திழுத்தவர் ரஜினிகாந்த்.ரஜினிகாந்த் ஆரம்பத்தில் அடிக்கடி இமயமலைக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.இமயமலை சென்று தியானம் செய்தால் தான் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்பதால் அவர் அடிக்கடி இமயமலை சென்றுவருவது வழக்கம்.

Advertisement

அண்மையில் வெளியான ஜெயிலர் படம் இவருக்கு பெரும் வெற்றியை பெற்றுக்கொடுத்தது, இப்படத்திற்கு பிறகு இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்திற்கு படக்குழு வேட்டையன் என பெயரிட்டுள்ளது.படத்தின் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

Embed Video Credits : LYCA PRODUCTION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in