ஜீ தமிழில் ஒளிபரப்பாகிய யாரடி நீ மோகினி என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து பிரபலம் ஆகியவர் நட்சத்திரா.இவர் தமிழில் கிடா பூசாரி மகுடி என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகம் ஆகியவர்,பெரும் கனவுகளுடன் கேரளாவில் இருந்து சென்னை வந்து வாய்ப்பு தேடி முதல் முறையாக நடித்தபடம் இது.
இவருக்கு இப்படத்தின் மூலம் எதிர்பார்த்த வரவேற்பு சினிமாவில் கிடைக்கவில்லை.இருப்பினும் மனம் தளராத நட்சத்திரா மீண்டும் தனக்கான இடத்தினை நோக்கி ஓடவே அவருக்கு ஜீ தமிழில் சீரியலில் வாய்ப்பு கிடைத்தது.
அந்த நாடகம் தான் யாரடி நீ மோகினி.இந்த நாடகத்தின் மூலம் பெரும் வரவேற்பினை சின்னத்திரையில் பெற்றார்.
இந்நிலையில் இவர் ஒருவரை காதலித்து வருவதாக இவரது தோழி சர்ச்சை ஸ்ரீநிதி அறிவித்திருந்தார் ,மேலும் இவர் காதலிக்கும் நபர் சரியானவர் இல்லை எனவும் அதனால நட்சத்திராவை காப்பாத்த வேண்டும் என பெரிய பிரச்சனை செய்தார்,இதற்கு நட்சத்திராவும் விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் நடிகை நட்சத்திரா விஷ்வா என்பவரை காதலித்து வந்தார்,இவை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நிர்வாக பணிகளை செய்து வருகிறார்.இருவரும் அண்மையில் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்
இவருக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது.இவர்களின் மகளுக்கு இதழ் என பெயரிட்டுள்ளனர்,
தற்போது இவர் மக்களுக்கு உணவு ஊட்டும் நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in