The Indian Times

மறைந்த கணவருடன் கடைசி தீபாவளியை கொண்டாடிய சீரியல் நடிகை ஸ்ருதி சண்முகம் வெளியிட்ட புகைப்படங்கள்

சாதாரண குடும்பத்தில் பிறந்து சினிமாவில் எதாவது சாதிக்க வேண்டும் என வாய்ப்பு தேட ஆரம்பித்தவர் சுருதி சண்முக பிரியா. எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னம்பிக்கையை மட்டும் மையமாக வைத்து வாய்ப்பு தேடினார்.

தேடிய வாய்ப்புகளுக்கு பயனாக பிரபல நாடக இயக்குனர் திருமுருகன் இயக்கும் புதிய நாடகத்தில் ஸ்ருதிக்கு வாய்ப்பு கிடைத்தது. நாதஸ்வரம் நாடகத்தில் நடித்து சின்னத்திரையில் அடியெடுத்துவைத்தார் ஸ்ருதி சண்முக பிரியா.அறிமுகமாகிய முதல் நாடகத்திலேயே தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றார்.

Advertisement

இதனை தொடர்ந்து தொடர்ச்சியாக நாடகங்கள் நடிக்க தொடங்கினார்.அதன்படி வாணி ராணி, கல்யாண பரிசு, பாரதி கண்ணம்மா ஆகிய தொடர்களில் நடித்து நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றார்.

பிரெஞ்சு படிப்பு மேல் தனி கவனம் செலுத்தி படித்து வந்ததால் நாடகங்களில் நடிப்பதில் இருந்து விலகினார்.இவர் இந்த ஆண்டு தொடக்கத்தில் பாடி பில்டர் ஆன அரவிந்த் சேகர் என்பவருடன் திருமணம் ஆகியது.

திருமணம் ஆகி ஒரே வருடத்தில் இவரது கணவர் தற்போது மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்,இந்த செய்தி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது

இந்நிலையில் இவர் தனது கணவருடன் கடைசியாக தீபாவளி கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இது ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in