The Indian Times

நான்காவது பைனலிஸ்ட் ஷகிலா? குக்கு வித் கோமாளியில் இருந்து கசிந்த தகவல்.

விஜய் டிவியில் பிரபலமாக இருக்கும் நிகழ்ச்சிகளுள் ஒன்று குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி. வாரம் தோறும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் ரசிக்கும்படி உள்ள நிகழ்ச்சியாக இருக்கின்றது. தற்போது இந்த நிகழ்ச்சியின் 2வது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. போன சீசன் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர் நடிகை வனிதா என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் இறுதிக்கட்டம் வரை அஸ்வின், கனி , பாபா பாஸ்கர் , ஷகிலா ஆகியோர் வந்தனர். இந்த 4 குக்குகளில் அஸ்வின், பாபா பாஸ்கர், கனி ஆகியோர் பைனலிஸ்ட்டாக தேர்வு செய்யப்பட்டனர்.

Advertisement

ஆனால் ஷகிலா போன வாரம் எலிமினேட் ஆகி சென்றார். இந்நிலையில் தற்போது இந்த வாரம் குக்கு வித் கோமாளியின் வைல்ட் கார்டு ரவுண்டு நடக்கிறது. இந்த வாரம் இதுவரை குக்கு வித் கோமாளியின் இருந்து வெளியேறி சென்ற அணைத்து குக்குகளும் வருகின்றனர். இந்த வாரம் தீபா, மதுரை முத்து, தர்ஷ குப்தா , பவித்ரா, ரித்திகா, ஷகிலா என்று எலிமினேட் ஆகி சென்ற அனைவரும் கலந்து கொள்கின்றனர். இதில் நிகழ்ச்சி இன்னும் ஹோஸ்டரில் கூட வராத நிலைஒயில் ஷகிலா தான் 4வது பைனலிஸ்ட் என்று ஒரு புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

சாண்டி மாஸ்டர் , அஸ்வின் , ஷகிலா ஆகியோர் எடுத்துக்கொண்ட புகைப்படம் நான்காவது பைனலிஸ்ட் ஷகிலா என்ற கேப்ஷன் உடன் வைரலாகி வருகிறது. இதை பார்த்த குக்கு வித் கோமாளி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in