என் குழந்த சினிமாவுல பெரிய காமெடியான வரணும்! பாபா பாஸ்கர் வைரல் வீடியோ

விஜய் டிவி யின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று குக்கு வித் கோமாளி. வாரந்தோறும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை ரசிக்காத ஆட்களே கிடையாது. ஒரு டிஷ்ஷை செய்து முடிப்பதற்குள் குக்குகள் பாடுபடுவதும் அவர்ககளுக்கு உதவுவதாக கூறி அவர்களை கோமாளிகள் வெச்சு செய்வதும் பார்ப்பவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது. இதில் வரும் கோமாளிகளை ஒவ்வொரு வீட்டிலும் தங்கள் வீட்டில் இருக்கும் நபர்களாய் பார்க்க துவங்கி விட்டனர் மக்கள். இந்த நிகழ்ச்சியில் வரும் ஒவ்வொரு கோமாளிகளுக்கும் சரி குக்குகளுக்கும் சரி அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  அர்ஜுனுக்கு சோற்றில் விஷம் கலந்து ஊட்டிய அம்மா... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

விளம்பரம்

வாட்ஸாப்ப் ஸ்டேட்டஸ் வைக்கும் அளவிற்கு இருக்கும் அஸ்வின் ஷிவாங்கி யின் காதல் , செட்டில் ஒரு பெண்ணை விடாமல் அனைவரையும் டாவடிக்கும் புகழின் குறும்புத்தனம் , பாலாவின் கோர்வையான கிண்டல் வார்த்தைகள் பார்ப்பவர்களை கண்ணில் தண்ணீர் வரும் அளவிற்கு சிரிக்க வைக்கும். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக வந்து பழைய ஜோக் சொல்லி கொடுமை படுத்தும் தங்கதுரை நடன இயக்குனர் பாபா பாஸ்கருடன் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அனைவரும் விரும்பும் குக் ஆக இருக்கும் பாபா பாஸ்கர் மாஸ்டர் இந்த நிகழ்ச்சியில் ரகளை செய்து வருகிறார். தற்போது இவருடன் தங்கதுரை சேர்ந்து வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment