விஜய் டிவி நிகழ்ச்சியில் கண்கலங்கிய குக்கு வித் கோமாளி சிவாங்கி!

விஜய் டிவி யின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று குக்கு வித் கோமாளி. வாரந்தோறும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை ரசிக்காத ஆட்களே கிடையாது. ஒரு டிஷ்ஷை செய்து முடிப்பதற்குள் குக்குகள் பாடுபடுவதும் அவர்ககளுக்கு உதவுவதாக கூறி அவர்களை கோமாளிகள் வெச்சு செய்வதும் பார்ப்பவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த பிரபலங்களுள் சிவாங்கி க்கு பெரும் பங்கு உண்டு. விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவியில் என்ட்ரி கொடுத்த சிவாங்கி குக்கு வித் கோமாளி என்ற ஒரே நிகழ்ச்சியில் உச்சம் தொட்டுவிட்டார்.

கட்டாயம் படிக்கவும்  முதல் முறையாக ஜோடியாக நின்று புகைப்படம் எடுத்த பாக்கியா மற்றும் பழனிச்சாமி.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

விஜய் டிவி நிகழ்ச்சியில் கண்கலங்கிய குக்கு வித் கோமாளி சிவாங்கி! 1

விளம்பரம்

சீசன் ஒன்னை விட சீசன் டூ வில் தான் சிவிங்கி அதிகம் பிரபலமடைந்தார் என்றே கூறலாம்.கேரளாவில் பிறந்த இவர் இன்று பல இளைஞர்களால் கியூட்டி பை என்று அன்போடு அழைக்கப்படுகிறார். தற்போது விஜய் டிவியின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவாங்கி கண் கலங்கியுள்ளார். தன்னுடைய பள்ளி பருவத்தில் பலர் இவரை தன் குறலுக்காக கேலி செய்ததாகவும், அதை பார்த்து பல முறை அழுதிருப்பதாகவும் கூறியுள்ளார். இதே போல் குக்கு வித் கோமாளியிலும் கூறியுள்ளார். இந்த குறலுக்காக பலர் கேலி செய்துள்ளனர் , ஆனால் என்னை தற்போது எல்லோரும் அவர்கள் வீட்டு பிள்ளையாக பார்க்கின்றனர் என்று சந்தோஷத்துடன் கூறியுள்ளார். தற்போது இந்த ப்ரோமோ வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  கையில காசு இல்லம்மா அதான் பிச்சையெடுத்தேன்.. மகன் சொன்னதை கேட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment