The Indian Times

வசீகரா பாடலுக்கு வசீகரமாக நடனமாடிய குக்கு வித் கோமாளி சிவாங்கி! வைரல் வீடியோ

விஜய் டிவி யின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று குக்கு வித் கோமாளி. வாரந்தோறும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை ரசிக்காத ஆட்களே கிடையாது. ஒரு டிஷ்ஷை செய்து முடிப்பதற்குள் குக்குகள் பாடுபடுவதும் அவர்ககளுக்கு உதவுவதாக கூறி அவர்களை கோமாளிகள் வெச்சு செய்வதும் பார்ப்பவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது. இந்த நிகழ்ச்சியில் வரும் ஒவ்வொரு கோமாளிகளுக்கும் சரி குக்குகளுக்கும் சரி அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். வாட்ஸாப்ப் ஸ்டேட்டஸ் வைக்கும் அளவிற்கு இருக்கும் அஸ்வின் ஷிவாங்கி யின் காதல் , செட்டில் ஒரு பெண்ணை விடாமல் அனைவரையும் டாவடிக்கும் புகழின் குறும்புத்தனம் , பாலாவின் கோர்வையான கிண்டல் வார்த்தைகள் பார்ப்பவர்களை கண்ணில் தண்ணீர் வரும் அளவிற்கு சிரிக்க வைக்கும்.

Advertisement

இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த பிரபலங்களுள் சிவாங்கி க்கு பெரும் பங்கு உண்டு. விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவியில் என்ட்ரி கொடுத்த சிவாங்கி குக்கு வித் கோமாளி என்ற ஒரே நிகழ்ச்சியில் உச்சம் தொட்டுவிட்டார். சீசன் ஒன்னை விட சீசன் டூ வில் தான் சிவிங்கி அதிகம் பிரபலமடைந்தார் என்றே கூறலாம். கேரளாவில் பிறந்த இவர் இன்று பல இளைஞர்களால் கியூட்டி பை என்று அன்போடு அழைக்கப்படுகிறார். இந்நிலையில் தற்போது வசீகரா பாடலுக்கு நடனமாடி பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in