The Indian Times

wild card என்ட்ரியில் வந்த போட்டியாளர்களை ஓட விடும் கோமாளிகள் | குக்கு வித் கோமாளி ப்ரோமோ

விஜய் டிவி யின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று குக்கு வித் கோமாளி. வாரந்தோறும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை ரசிக்காத ஆட்களே கிடையாது. ஒரு டிஷ்ஷை செய்து முடிப்பதற்குள் குக்குகள் பாடுபடுவதும் அவர்ககளுக்கு உதவுவதாக கூறி அவர்களை கோமாளிகள் வெச்சு செய்வதும் பார்ப்பவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது. இந்த நிகழ்ச்சியில் வரும் ஒவ்வொரு கோமாளிகளுக்கும் சரி குக்குகளுக்கும் சரி அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். வாட்ஸாப்ப் ஸ்டேட்டஸ் வைக்கும் அளவிற்கு இருக்கும் அஸ்வின் ஷிவாங்கி யின் காதல் , செட்டில் ஒரு பெண்ணை விடாமல் அனைவரையும் டாவடிக்கும் புகழின் குறும்புத்தனம் , பாலாவின் கோர்வையான கிண்டல் வார்த்தைகள் பார்ப்பவர்களை கண்ணில் தண்ணீர் வரும் அளவிற்கு சிரிக்க வைக்கும்.

Advertisement

தற்போது இந்த வார குக்கு வித் கோமாளி யின் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வரம் வைல்ட் கார்டு ரவுண்டு என்பதால் எலிமினேட் ஆகி சென்ற தர்ஷா குப்தா , மதுரை முத்து , பவித்ரா , தீபா , ஷகிலா , ரித்விகா ஆகியோர் மீண்டும் கலந்து கொள்கிறார்கள். இந்த வாரம் கோமாளிகள் குழந்தைகளின் கதைகளில் வரும் கதாபாத்திரமாக வந்துள்ளனர். புகழ் காட்டுவாசியாகவும், ஷிவாங்கி மந்திரவாதியாகவும் , பாலா அலாவுதினாகவும், சுனிதா கிழவியாகவும் வந்திருக்கிறார்கள். இதில் யார் வெற்றி பெற்று நான்காவது பைனலிஸ்ட் ஆக போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. எது எப்படியோ இந்த வாரம் நிறைய fun இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. தற்போது குக்கு வித் கோமாளியின் 3வது ப்ரோமோ வெளியாகி உள்ளது.

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in