வெற்றிமாறனை சந்தித்த சிம்பு…  சிம்புவை வைத்து படம் இயக்குவாரா வெற்றிமாறன்?

பிரபல இயக்குனர் டி ராஜேந்தர் மகன் சிலம்பரசன்.இவரை ரசிகர்கள் லிட்டில் சூப்பர் ஸ்டார் ,சிம்பு என செல்லமாகதான் அழைப்பார்கள்.அந்தளவிற்கு இவர் மீது பிரியம் வைத்துள்ளனர். மகனை நடிகனாக்க வேண்டும் என ராஜேந்தர் சிம்புவை குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் உறவை காத்த கிளி என்ற படத்தின் மூலம் அறிமுகம் செய்து வைத்தார்.பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக தொடர்ந்து நடித்து அசத்தியுள்ளார்.அப்பாவை போல இவரும் பல திறமைகளை கொண்டவர்.2002ஆம் ஆண்டு காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு கதாநாயகனாக அறிமுகமாகி பட்டிதொட்டி எங்கும் பெரும் வரவேற்பினை பெற்றார்.நடை உடை பாவனை என அனைத்திலும் புதிய யுக்தியை கையாண்டு ரசிகர்களை தனது வசம் இழுத்தார்.

கட்டாயம் படிக்கவும்  பத்துதல படத்தின் "ராவடி" பாடல் VIDEO SONG வெளியாகியது...

வெற்றிமாறனை சந்தித்த சிம்பு...  சிம்புவை வைத்து படம் இயக்குவாரா வெற்றிமாறன்? 3

பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் இன்று பெரும் உச்ச நட்சத்திரமாக உள்ளார் சிலம்பரசன்.நடிகர் மட்டுமில்லாமல் இசையமைப்பாளர்,பாடகர்,பாடலாசிரியர் என பல திறமைகளை தன்னுள் கொண்டுள்ளவர்.அண்மையில் உடல் எடை அதிகம் இருந்த சிம்பு தற்போது ரசிகர்களுக்காக முற்றிலும் குறைத்து கேலி செய்தவர்கள் வாயை அடைத்து படங்களில் பழைய சிம்புவாக நடித்து அசத்தி வருகிறார்.இயக்குனர் கவுதம் மேனன் கூட்டணியில் இவர் நடித்த விண்ணை தாண்டி வருவாயா படம் பெரும் வரவேற்பினை பெற்றது.தற்போது பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கவுதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்துள்ளார்.இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.ஐசரி கணேசன் இப்படத்தினை தயாரித்துள்ளார்,

கட்டாயம் படிக்கவும்  படம் வேறலெவல் தாறுமாறு.... ஆஸ்கார் விருதே கிடைக்கும்... விடுதலை PUBLIC REVIEW

வெற்றிமாறனை சந்தித்த சிம்பு...  சிம்புவை வைத்து படம் இயக்குவாரா வெற்றிமாறன்? 4

இப்படம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பினை சிம்புவுக்கு பெற்றுக்கொடுத்தது.இப்படத்தினை தொடர்ந்து சிம்பு பத்து தல படப்பிடிப்பில் மும்முரமாக நடித்து வருகிறார்.இப்படத்தினை விரைந்து முடித்துக்கொடுக்க வேண்டும் என கடுமையாக உழைத்து வருகிறார். இந்நிலையில் சிம்பு அண்மையில் இயக்குனர் வெற்றிமாறனை சந்தித்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் பொழுது இருவரும் புதிய படத்தில் இணைவது குறித்தும் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.விரைவில் இவர்கள் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Comment