The Indian Times

இது வந்து நொந்த கதை… SIREN படத்தின் BLUESATTAI மாறன் விமர்சனம்

நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமா தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்,ஜெயம் படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்து இன்று சினிமாவில் உச்ச இடத்தினை பிடித்துள்ளார்.முதல் படமே ஜெயம் என்பதால் ரவியுடன் ஜெயம் பெயரில் மட்டுமல்ல படத்திலும் இணைந்து விட்டது.இவர் அண்ணன் ஜெயம் ராஜாவை வைத்து சினிமாவிற்குள் நுழைந்து இருந்தாலும் தனது கடின உழைப்பு மற்றும் நடிப்பினால் மட்டுமே இந்த உயரத்தினை அடைந்துள்ளார்.இவருக்கென தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

ஜெயம் ராஜா இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி,அரவிந்த் சாமி நடித்த திரைப்படம் தனி ஒருவன்.இந்த படம் மாபெரும் ஹிட் அடித்தது.இப்படம் ஜெயம் ரவியின் சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக இருந்தது.மிருதன்,டிக் டிக் டிக் போன்ற திரைப்படங்களில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுக்க மக்களை வெகுவாக கவர்ந்தார்.தற்போது இவர் இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் சைரன் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்,ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

Advertisement

இப்படத்தை ப்ளூசட்டை மாறன் விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். வீடியோவில், இது பலமுறை வந்து நொந்த கதை என கூறியுள்ளார். மேலும் கதையில் குழப்பம் எனவும் படம் நன்றாக இல்லை என கூறியுள்ளார். மேலும் இந்த படத்தை பற்றி பெரிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை என கூறி உள்ளார்.

Embed Video Credits : TAMIL TALKIES

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in