வெளியானது டாக்டர் படத்தின் ரிலீஸ் தேதி! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் எதிர்நீச்சல் போட்டு எதிர்பாராத அளவிற்கு உச்சத்தை அடைந்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன். மெரினா படத்தின் மூலம் கதநாகனாக அறிமுகமான இவர் இன்று அளவில்லா ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார் என்பது அனைவரும் அறிந்தது. கம்மியான படங்களில் நடித்தே இன்று பல முன்னணி நடிகர்களுக்கு சவாலாய் வலம் வந்து கொண்டிருக்கும் இவர் ஆரம்பகாலத்தில் பட்ட கஷ்டம் கொஞ்சநெஞ்சம் கிடையாது. கடின உழைப்பும் விடா முயற்சியும் இருந்தால் தொலைக்காட்சி தொகுப்பாளரும் மாஸ் ஹீரோவாக மாறலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாய் இருப்பவர் சிவகார்த்திகேயன்.

கட்டாயம் படிக்கவும்  கமல்ஹாசன் LIVE-ல் டப்பிங் பேசுவதை வியந்து பார்த்த விக்னேஷ் சிவன்

வெளியானது டாக்டர் படத்தின் ரிலீஸ் தேதி! எதிர்பார்ப்பில் ரசிகர்கள். 1

விளம்பரம்

இன்றும் பல இளைஞர்களுக்கு இன்ஸ்ப்பிரேஷனாய் இருப்பவர் இவர். தற்போது சிவகார்த்திகேயன் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் டாக்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதை தொடர்ந்து அயலான் , டான் என அடுத்தடுத்து படங்களில் நடித்து கொண்டு வருகிறார். இந்நிலையில் இவர் நெல்சன் இயக்கத்தில் நடித்து முடித்த டாக்டர் திரைப்படம் வெளியிடுவதற்கு தாயார் நிலையில் உள்ளது. அனிருத்தின் இசையில் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி சமூகவலைத்தளங்களை கலக்கி வருகிறது. மே 26 தேதி படம் வெளியிடப்படும் என்று அதிகாரபூர்வ தகவல் வெளியானதும் ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தில் மிதந்தனர்.

கட்டாயம் படிக்கவும்  HELOO..தாத்தா...பேயுடன் பேச்சுவார்த்தை நடத்திய CWC சிவாங்கி

வெளியானது டாக்டர் படத்தின் ரிலீஸ் தேதி! எதிர்பார்ப்பில் ரசிகர்கள். 2

விளம்பரம்

முதல் முறையாக டாக்டர் ஆகா நடித்து இருக்கும் சிவகார்த்திகேயனை திரையில் பார்ப்பதற்கான ஆர்வமும் கூடியது. ஏற்கனவே நெல்சன் திலீப்குமாரின் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா திரைப்படம் பட்டையை கிளைப்பியது. ரசிகர்கள் அனைவரும் உற்சாகமாய் படத்திற்காக காத்துக்கொண்டிருந்த நிலையில் தேர்தல் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது ரசிகர்களை சோகத்துக்குளாகியது. தற்போது இந்த படம் வரும் 26 ஆம் தேதி ரிலீஸ் ஆகாமல் தேர்தல் முடிந்து வரும் ரம்ஜான் பண்டிகையின் விருந்தாக திரைக்கு வர உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment