The Indian Times

நகைச்சுவை நடிகர் செந்தில் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

1980 மற்றும் 90களில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் செந்தில்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

தற்போது வரை இவரது காமெடியை ரசித்து வருகின்றனர்.

Advertisement

இவர் கவுண்டமணியுடன் இணைந்து அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை.

சிறுவயதிலேயே படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையால் வாய்ப்பு தேடி அலைந்த இவருக்கு இறுதியாக வாய்ப்பு கிடைத்தது 1979 ஆம் ஆண்டு வெளியாகிய ஒரு கோயில் இரு தீபங்கள் என்ற படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார்.

அதனை தொடர்ந்து தமிழில் தொடர்ச்சியாக படங்கள் நடிக்க தொடங்கினார்.கரகாட்டக்காரன் படத்தில் கவுண்டமணியின் கூட்டணியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதனை தொடர்ந்து கவுண்டமணியுடன் பயணம் செய்ய தொடங்கினார்.

இவர்கள் இல்லாத படமே இல்லை என்ற அளவிற்கு தமிழ் சினிமா மாறிவிட்டது.அந்த அளவிற்கு வெற்றி படங்களை கொடுக்க தொடங்கிவிட்டனர்.பல படங்கள் இவர்களின் காமெடியாலேயே ஜெயித்திருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது. இவர் குடும்பத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in