The Indian Times

சுதர்சனுடன் கல்யாண கோலத்தில் குக்கு வித் கோமாளி பவித்ரா! வைரல் வீடியோ

விஜய் டிவி யின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று குக்கு வித் கோமாளி. வாரந்தோறும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை ரசிக்காத ஆட்களே கிடையாது. ஒரு டிஷ்ஷை செய்து முடிப்பதற்குள் குக்குகள் பாடுபடுவதும் அவர்ககளுக்கு உதவுவதாக கூறி அவர்களை கோமாளிகள் வெச்சு செய்வதும் பார்ப்பவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது. இந்த நிகழ்ச்சியில் வரும் ஒவ்வொரு கோமாளிகளுக்கும் சரி குக்குகளுக்கும் சரி அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர்.

Advertisement

வாட்ஸாப்ப் ஸ்டேட்டஸ் வைக்கும் அளவிற்கு இருக்கும் அஸ்வின் ஷிவாங்கி யின் காதல் , செட்டில் ஒரு பெண்ணை விடாமல் அனைவரையும் டாவடிக்கும் புகழின் குறும்புத்தனம் , பாலாவின் கோர்வையான கிண்டல் வார்த்தைகள் பார்ப்பவர்களை கண்ணில் தண்ணீர் வரும் அளவிற்கு சிரிக்க வைக்கும். சென்ற வாரம் குக்கு வித் கோமாளியில் celebration ரவுண்டு நடைபெற்றது. அதில் இதுவரை எலிமினேட் ஆகி சென்ற அனைவரும் கலந்து கொண்டனர். பைனல்ஸ நடக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் செலப்ரேஷன் ரவுண்டு நடைபெற்று முடிந்தது.

இதில் குக்கு வித் கோமாளியில் கலந்து கொண்ட குக்குகளின் உறவினர்களும் கலந்துகொண்டுனர். ஆதவன் , குரேஷி , நிரஞ்சனி அகத்தியன், மிலா, சுதர்சன் ஆகியோர் கலந்துகொண்டுனர்.

அனைவரும் உறவினரோடு வந்திருந்த நிலையில் பவித்ரா தன் நெருங்கிய நண்பர் சுதர்சனுடன் வந்திருந்தார். இந்நிலையில் பவித்ரா சுதர்சனுடன் கல்யாண கோலத்தில் நடித்த விளம்பரத்தின் வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisement

https://www.youtube.com/watch?v=jQioy5RBczY

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in