The Indian Times

மனைவியோடு மழையில் மனம் நிறைய நனைந்து மகிழ்ந்த சினேகன்! வைரலாகும் வீடியோ! Snekan Kannika Dancing In Rain Video

90ஸ் கிட்ஸ்களுக்கு நன்கு தெரிந்த ஒரு பாடலாசிரியர், கவிஞர் என்றால் அது கவிஞர் சினேகன் என்றே குறிப்பிடலாம்! அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் மகத்தான ஆதரவு பெற்றவர் இவர் என்றால் அது மிகையாகாது! இவர் முதல் முதலில் தமிழ்நாட்டில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்ட பொழுது அதில் போட்டியாளர்களுள் ஒருவராக கலந்து கொண்டார்! முதல் முறையாக தமிழக மக்கள் இப்படிப்பட்ட ஒரு வித்தியாசமான நிகழ்ச்சியை கண்டதால் இவர் வீட்டில் உள்ள சகா போட்டியாளர்களை அடிக்கடி கட்டிப்பிடித்து அரவணைத்து ஆதரவு தந்த விதம் பெரும்பான்மையான மக்களால் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டது!

Advertisement

ஆனாலும், அதற்கெல்லாம் அவர் அஞ்சவில்லை என்று தான் சொல்ல வேண்டும்! மேலும் நல்ல முறையில் போட்டியை விளையாடி இறுதிக்கு அருகாமையில் வந்தார்! மேலும், உலக நாயகன் கமல் ஹாசனின் அரசியல் பயணம் அப்போது தான் துளிர் விட தொடங்கிய நிலையில் அவருடன் அரசியல் பயணமும் மேற்கொண்டு வருகிறார்! பாடல் எழுதுவது மட்டுமில்லாமல் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது! சில மாதங்களுக்கு முன்பு தான் இவர் சீரியல் நடிகை கன்னிகாவை காதலித்து கரம்பிடித்தார் என்ற செய்தி தெரியவந்தது! கமல் ஹாசன் முன்னிலையில் பாரம்மாண்டமாக நடைபெற்றது இவர்களின் திருமணம் என்றும் சொல்லலாம்! அதுவரைக்கும் சினேகன் வாழ்க்கையில் பெண்கள் உள்ளார்களா என்ற கேள்விக்கு 8 வருடம் காதலித்து கணவன் மனைவி ஆகியுள்ளோம் என்றும் கூறியுள்ளார்!

மிகுந்த புரிதலின் அடிப்படையிலும் அன்பாலும் விட்டுக்கொடுத்தல் போன்ற வாழ்க்கையை செம்மையாக்க தேவையான அணைத்து குணங்களுடன் திருமண வாழ்க்கையை இனிதே நடத்தி வருகின்றார்! சமீபத்தில் பெய்த கன மழையில் மனைவியோடு மகிழ்ச்சியாக ஆடிப்பாடியுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது! அந்த வீடியோவை நீங்களும் பார்த்து மகிழுங்கள்! Watch The Video Below!

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in