தமிழ் பேச்சை மீறி மெக்கானிக்கல் ஷாப்பில் வேலைக்கு சேர்ந்த சரஸ்வதி…. தமிழும் சரஸ்வதியும்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் முக்கிய தொடர் தமிழும் சரஸ்வதியும்.இந்த நாடகத்தினை மாபெரும் வெற்றியடைந்த சீரியல்கள் ஆன திருமதி செல்வம்,தெய்வமகள்,தென்றல்,நாயகி போன்ற வெற்றித்தொடர்களை இயக்கிய இயக்குனர் குமரன் இயக்குகிறார்.இதுவே இதன் வெற்றிக்கு முதல் காரணம் ஆகும்.இதில் கதாநாயகனாக பிரபல தொகுப்பாளரும் நடிகருமான தீபக் ஹீரோவாக நடித்து வருகிறார்,அதேபோல ஹீரோயினாக தொகுப்பாளினியும்,நடிகையுமான நக்ஷத்திரா நடித்து வருகிறார். இந்த நாடகத்தின் மூலம் இவர்களுக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  பாக்கியா மீது காதலில் விழுந்த பழனிசாமி... பாக்கியலட்சுமி ப்ரோமோ

தமிழ் பேச்சை மீறி மெக்கானிக்கல் ஷாப்பில் வேலைக்கு சேர்ந்த சரஸ்வதி.... தமிழும் சரஸ்வதியும் 1

விளம்பரம்

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த தொடருக்கு மக்கள் அதிகளவு ஆதரவு அளித்து வருகின்றனர்.சரஸ்வதியாக நக்ஷத்ரா பொருத்தமாக நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளார்.அதேபோல் மக்களிடம் தமிழ் கதாபாத்திரத்திலும் தீபக் ஒன்றிவிட்டார் என்று தான் கூறவேண்டும்.தற்போது தமிழும் சரஸ்வதியும் பல திருப்பங்களுடன் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஓடி வருகிறது.இதனால் இந்த தொடரை பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  குக் வித் கோமாளி சீசன் 5 GRAND OPENING PROMO வெளியாகியது

தமிழ் பேச்சை மீறி மெக்கானிக்கல் ஷாப்பில் வேலைக்கு சேர்ந்த சரஸ்வதி.... தமிழும் சரஸ்வதியும் 2

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி. ப்ரோமோவில் சரஸ்வதி தனது மெக்கானிக் வேலை தெரியும் என்பதால் குடும்பத்திற்காக வேலைக்கு செல்வதாக தமிழிடம் கூற,தமிழ் பயங்கர கடுப்பாகியுள்ளார்.வேலைக்கு எல்லாம் நீ செல்ல வேண்டாம் என சரஸ்வதியிடம் சண்டையிடுகிறார்.இருந்தும் தமிழுக்கு தெரியாமல் சரஸ்வதி வேலைக்கு செல்கிறார்.இது தமிழுக்கு தெரிந்தால் என்ன ஆகும் என்பது தெரியவில்லையே என ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  தம்பி மனைவியிடம் வம்பு இழுத்தவனை பொளந்துகட்டிய முத்து.. சிறகடிக்க ஆசை

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment