The Indian Times

ஆக்சனில் மிரட்டி அதிரடியில் கொடி நாட்டும் சுந்தர் சி நடிக்கும் தலைநகரம் 2 படத்தின் TRAILER இதோ!!!

இயக்குனர் மற்றும் நடிகராக சினிமாவில் வலம் வருபவர் சுந்தர் சி.சூப்பர் ஸ்டார் ரஜினி,மற்றும் உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து பல வெற்றிப்படங்களை தமிழுக்கு கொடுத்தவர் இவர்.முறைமாமன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமாகியவர் இவர்.தொடர்ந்து பல நல்ல படங்களை இயக்கி மாபெரும் வரவேற்பினை பெற்றார் சுந்தர் சி.இன்று வரை நாம் ரசித்து பார்க்கும் 90.களில் வெளியாகிய படங்களில் பாதி இவர் இயக்கியவைதான்.உதாரணமாக சொல்லப்போனால் அருணாச்சலம்,உள்ளதை அள்ளிதா,அன்பே சிவம்,வின்னர் போன்ற வெற்றி படங்கள் இவருடையதுதான். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

இயக்குனர் ஆக மட்டுமில்லாமல் தற்போது கதாநாயகனாகவும் சினிமாவை கலக்கி வருகிறார்.தலைநகரம் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் கதாநாயகனாக அறிமுகம் ஆகினார்.இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்றுத்தந்தது.இதனை தொடர்ந்து தமிழில் தொடர்ந்து கதாநாயகனாக படங்கள் நடிக்க தொடங்கிவிட்டார்.அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய இருட்டு மற்றும் அரண்மனை 3 போன்ற படங்கள் நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது.இவர் நடிகை குஷ்புவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு அவந்திகா,அனந்திகா என்ற இரண்டு பெண்குழந்தைகள் உள்ளது.

Advertisement

தற்போது சுந்தர் சி நடிகராகவும்,இயக்குனராகவும் சினிமாவில் அசத்தி வருகிறார்.நடிகராகவும் நடிக்கும் படங்களில் ஹிட் கொடுத்தும்,இயக்குனராகவும் இயக்கும் படங்களில் ஹிட் கொடுத்து வருகிறார்.சுந்தர் சி இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு தலைநகரம் படத்தில் நடித்திருந்தார்.தற்போது இப்படத்தின் இரண்டாவது பாகத்தில் சுந்தர் சி நடித்துள்ளார்.இப்படத்தினை துரைராஜ் இயக்கியுள்ளார்.முந்தய படத்தில் நடித்த ரைட்டு கதாபாத்திரத்தில் தான் இப்படத்திலும் நடித்துள்ளார்.தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Embed video credits : saregama tamil

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in