வாரிசு இசைவெளியீட்டு விழா மேடையில் அனல் பறக்க பேசிய விஜய்…. நீங்க என் மேல வச்ச நம்பிக்கையை காப்பாத்துவேன்- விஜய்

தமிழ் சினிமா கொண்டாடும் உச்ச நடிகர் தளபதி விஜய்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.இவரின் படம் வெளியாகும் நாளை ரசிகர்கள் பண்டிகை நாள் போல கொண்டாடுவார்கள் தற்போது பண்டிகை நாளன்று படம் வெளியானால் என்னாகும் என்று நினைத்து பாருங்கள்,அதன்படி தற்போது தளபதி விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் படம் தான் வாரிசு.இயக்குனர் வம்சி இப்படத்தினை இயக்கி உள்ளார்.இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.தில் ராஜு தயாரித்துள்ள இப்படத்திற்கு . ராஷ்மிக்கா மந்தனா நடித்துள்ளார்.இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை இன்று சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் வைத்து பிரமாண்டமாக படக்குழு நடத்தி வருகிறது.

வாரிசு இசைவெளியீட்டு விழா மேடையில் அனல் பறக்க பேசிய விஜய்.... நீங்க என் மேல வச்ச நம்பிக்கையை காப்பாத்துவேன்- விஜய் 1

விளம்பரம்

இந்த விழா மேடையில் பேச நடிகர் விஜய் வரும் பொழுது அனைவர்க்கும் ரஞ்சிதமே முத்தினை கொடுத்துள்ளார்,மேலும் முத்தம் கொடுப்பதற்கு ஒரு ஸ்டைல் மாட்டிக்கிச்சு இனிமே இதுதான் என ரசிகர்களுக்கு முத்தம் கொடுத்தார்.பின்னர் பேசிய அவர் என் நெஞ்சில் குடி இருக்கும் என்னோட நண்பா நண்பிகள் எல்லாருக்கும் என்னோட வணக்கம் என கூறி உரையை தொடங்கியுள்ளார்,பின்னர் தயாரிப்பாளர் தில் ராஜுவுக்கு குழந்தை பிறந்துள்ளதால் மேடையில் அதற்கு அவரை நடிகர் விஜய் வாழ்த்தினார்,மேலும் சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் மறுக்காமல் நடிக்க வந்த எஸ் ஜே சூர்யா மற்றும் குஷ்புவுக்கு நன்றிகள் கூறியுள்ளார்.என்னோட ரசிகர்களிடம் இரத்த தானம் பற்றி நான் நீண்ட நாட்களாக பேச விரும்பினேன்,ரத்தம் ஒன்றுக்குத்தான் எந்த போட்டியோ ,மதமோ ,ஜாதியோ கிடையாது,அதனிடம் இருந்து நாம் சரிசமத்தினை கற்றுக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  நண்பர்களுடன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை சமந்தாவின் புகைப்படங்கள்

வாரிசு இசைவெளியீட்டு விழா மேடையில் அனல் பறக்க பேசிய விஜய்.... நீங்க என் மேல வச்ச நம்பிக்கையை காப்பாத்துவேன்- விஜய் 2

விளம்பரம்

பின்னர் அவரது குட்டி ஸ்டோரியை கூறியுள்ளார்,அதில் ஒரு குடும்பத்தில் அண்ணன் மற்றும் தங்கை இருந்தார்கள்,இருவருக்கும் சாக்லேட் கொடுப்பார்கள்,அண்ணன் தன்னுடையதை பள்ளிக்கு கொண்டு செல்ல ஒரு இடத்தில் வைப்பான்,அதை தங்கை எடுத்து சாப்பிட்டு விடுவார்,தொடர்ந்து இது நடந்துகொண்டே இருந்தது.ஒரு நாள் தங்கை அண்ணனிடம் அன்பு என்றால் என்ன என்று கேட்க,அதற்கு அந்த அண்ணன்,நீ உன்னுடைய சாக்லெட்டை சாப்பிட்டு விட்டு என்னுடையதையும் சாப்பிடுவாய் என்பதால் தொடர்ந்து அந்த இடத்திலேயே வைப்பேன்.அதுதான்மா அன்பு என்றார்.என கூறி ரசிகர்களை புல்லரிக்க வைத்துள்ளார். மேலும் நம்ம போகிற பாதை நிறைவாக இருக்க வேண்டும் என்றால் நாம் தேர்ந்தெடுக்கும் பாதை சரியாக இருக்க வேண்டும். ஒருவர் உங்களை எதிர்த்தால் நீங்கள் சரியான பாதையில் இருக்கீறீர்கள் என்று அர்த்தம்.

கட்டாயம் படிக்கவும்  விக்கியுடன் ஐபிஎல் பார்க்க வந்த நடிகை நயன்தாரா புகைப்படங்கள் இதோ

வாரிசு இசைவெளியீட்டு விழா மேடையில் அனல் பறக்க பேசிய விஜய்.... நீங்க என் மேல வச்ச நம்பிக்கையை காப்பாத்துவேன்- விஜய் 3

விளம்பரம்

1990ல் ஒரு நடிகர் எனக்கு போட்டியாக வந்தார்,பின்னாளில் அவர் என்னுடன் சீரியசான போட்டியாளராக மாறினார்,அந்த நடிகரின் வெற்றியால் தொடர்ந்து நானும் கஷ்டப்பட்டு ஓடினேன்,அந்த நடிகரை விட அதிக வெற்றியை பெற வேண்டும் போராடினேன்,நமக்கு அது மாதிரி போட்டியாளர் தான் வேண்டும்,அவர் பெயர் தான் ஜோசப் விஜய் என தனக்கு தன்னையே போட்டியாளராக எடுத்து கொண்டு தன்னை உருவாக்கியுள்ளார் விஜய்.என்னை உருவாக்கிய என் புள்ளைங்களுக்கு என் நன்றிகள் என் முத்தங்கள் ,வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நன்றியை காட்டிக்கொண்டே இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment